ரபேல் போர் விமானத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்ப்பை நாளை உச்சநீதிமன்றம் வழங்குகின்றது.
2007 ஆம் ஆண்டு பல்நோக்கு பயன்பாடு கொண்ட 126 போர் விமானங்களை வாங்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டது.
ஜனவரி 2012 ஆம் ஆண்டு விமானம் தயாரிக்கும் ஏலத்தில் பிரான்சின் டஸ்ஸால்ட் நிறுவனம் வென்றது.
ஜனவரி 2012 ஆம் ஆண்டு முதல் கட்டமாக 126 போர் விமானங்களில் பயன்பாட்டுக்கு தயாரான நிலையில் 18 விமானங்களை தரவேண்டும் என ஒப்பந்தம் செய்தது.
ஜனவரி 2012 ஆம் ஆண்டு 108 விமானங்களை இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்தது.
மார்ச் 2014 ஆம் ஆண்டு விமானம் தயாரிப்பதற்கான பணிகள் குறித்து டஸ்ஸால்ட் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோன்ஆட்டிகல் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தின.
ஒரு ரபேல் விமானம் சுமார் 629 கோடி என டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் கூறப்படுகிறது.
மே 2014 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது.
மார்ச் 2015 ஆம் ஆண்டு அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.
ஏப்ரல் 2015 ஆம் ஆண்டு டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 போர் விமானங்களை வாங்க உள்ளதாக பிரதமர் மோடி பிரான்சில் அறிவித்தார்.
செப்டம்பர் 2014 ம் ஆண்டு 36 விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது.
செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு 126 போர் விமானங்கள் தேவையில்லை என்றும் 36 விமானங்களை போதுமானது என்று அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்தார்.
செப்டம்பர் 2016 ஆம் ஆண்டில் 36 விமானங்களை வாங்க 58,000 கோடி என விலை நிர்ணயம் செய்தது. இதில் ஒரு விமானம் 1670 கோடி என கணக்கிடப்பட்டது .
செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு ஒரு ரபேல் விமானத்திற்கு பாரதிய ஜனதா அரசு மூன்று மடங்கு விலை கொடுத்து ஒப்பந்தம் செய்தது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
அக்டோபர் 2016 ஆம் ஆண்டு விமானங்களை தயாரிக்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் டஸ்ஸால்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.
அக்டோபர் 2016 ஆம் ஆண்டு பொதுத் துறை நிறுவனமான HAL_ஐ கணக்கில் கொள்ளாமல் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பாரதிய ஜனதா அரசு உதவி செய்ததாக காங்கிரஸ் அரசு குற்றம் சாட்டியது.
டிசம்பர் 2017 ஆம் ஆண்டு விமானங்களை சேர்ந்து தயாரிக்க டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து.ரிலைன்ஸ் நிறுவனத்திற்கு அழைப்பு வந்தது மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை என தெரிவித்தது.
செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துரை செய்தது இந்திய அரசுதான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே பேட்டியளித்தார்.
செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் , டஸ்ஸால்ட் இடையே ஒப்பந்தத்தில் இந்தியா பிரான்ஸ் அரசுகள் தலையிடவில்லை , ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தது தேர்ந்தெடுத்து தங்கள் முடிவு என நிறுவனம் டசால்ட் நிறுவனம் அறிவித்தது
ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த விவகாரத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என அருண் ஜேட்லி , நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தனர்.
ரபேல் விவகாரம் பற்றி விசாரணை நடத்த கோரி சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றின் மீதான அரசின் மீதான விசாரணை முடித்து கடந்த டிசம்பர் 14ஆம் தேதி 2018 என்று உச்சநீதிமன்றம் ரபேல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்ய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதன் விசாரணை முழுமையாக முடிந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சீராய்வு மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற தீர்ப்பை தலைமை நீதிபதி கொண்ட 3 பேர் அமர்வு நாளை பிறப்பிக்கின்றது.