Categories
சினிமா தமிழ் சினிமா

“பண மோசடி வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய தயாரிப்பாளர்”…. ஞானவேல் ராஜாவின் மனு தள்ளுபடி…!!

பண மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து மூன்று கோடி மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது ராமநாதபுரம் போலீசார் 100 கோடி வரை மோசடி செய்ததாக பலர் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த படங்களில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக அவர்கள் ஞானவேல் ராஜாவின் பெயரை சேர்த்து  விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனால் பஜார் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி என தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் படத்திற்கான திரையரங்கு உரிமைக்காக 6.1 கோடி நிர்ணயம் செய்யப்பட்டதாகவும், .2 கோடி முன் பணமாக பெறப்பட்டு படத்திற்கான உரிமம் ஒப்படைக்கப்பட்டது. இதில் எந்த ஒரு பணம் மோசடியும் நடைபெறவில்லை. எனவே இந்த பண மோசடிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

இந்த மோசடிக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இந்த வழக்கை விசாரிப்பதற்காக இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், இவ்வழக்கில் இருந்து தவறுதலாக சேர்க்கப்பட்ட பெயரை நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன் விசாரணைக்கு வரப்பட்டது .அப்போது ஞானவேல்ராஜாவின் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Categories

Tech |