மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய அரசு இஸ்லாமிய இயக்கங்களுக்கு தடைவிதித்தது என்ற செய்தி அறிந்து, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் முன்னெடுக்காத ஒரு நடவடிக்கையை தமுமுகவோடு, மனிதநேய மக்கள் கட்சியோடு தமிழ்நாட்டில் ஏனைய இயக்கங்களோடு,
அரசியல் முரண்பட்ட கருத்துக்கள் உள்ள இயக்கமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இருக்கிற அந்த இயக்கத்தின் உடைய அலுவலகங்களிலே நமது காவல்துறை அவ்வளவு போர்க்கால அடிப்படையில் அங்கு இருக்கிற உணவு பண்டங்கள், இருக்கைகள், ஆவணங்கள், செயல்பட்டுக்கொண்டு இருக்கின்ற ஏசி, செயல்பாட்டுக்கு கொண்டு இருக்கின்ற பேன்,
எரிகின்ற லைட், இதை கூட நாங்க ஆஃப் பண்ண மாட்டோம், உடனே சில் வைக்கணும் அப்படின்னு சொல்லி, என்னுடைய இஸ்லாமிய உறவுகளால் ஆட்சிக்கு வந்து, அதனடிப்படையில் இன்றைக்கு காவல்துறைக்கு பொறுப்பேற்று இருக்கின்ற டிஜிபி அவர்களுக்கு உத்தரவிடுகிறீர்களே இது எந்த விதத்தில் நியாயம் ? என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், ஒரு பாசிச சங்பரிவாரக் கும்பல்கள் வேட்டையாடி கொண்டிருக்கிறான். இமயம் முதல் குமரி வரை ஜனநாயக சக்திகளை வேட்டை ஆடுகின்றான். மிகப்பெரிய எழுத்தாளர்களை, மிகப்பெரிய சிந்தனையாளர்களை, மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளை சுட்டு படுகொலை செய்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல். அதிகாரபூர்வமாக நீதிமன்ற நீதியரசர்களால்….
இந்தியாவில் 18க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளில் சம்மந்தப்பட்டது ஆர்எஸ்எஸ் இயக்கம் என்று நீதிமன்றங்களால் வாதிடபட்ட ஒரு கும்பலின் தலைவனை இந்த நாட்டில் கைது செய்ததாக வரலாறு உண்டா ? என தெரிவித்தார்.