கனடாவிற்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களிடமிருந்து தப்பிப்பதற்காக அணைத்து நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கனடாவில் காரணமில்லாமல் வரும் விமான பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். அதில் கனடாவுக்கு வருகை புரியும் விமான பயணிகள் தங்களது சொந்த செலவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் தங்களை மூன்று நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.