Categories
தேசிய செய்திகள்

பிப்.23 முதல் 26ஆம் தேதி வரை…. JEE மெயின் தேர்வு…!!

2021ம் வருட JEE மெயின் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 23 முதல் 26 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

JEE மெயின் 2021 வருட தேர்வு தேதிகளை, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மாணவர்கள் jeemain.nta.nic.in.என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது.

மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் JEE மெயின் தேர்வு நடைபெறும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். முதற்கட்ட தேர்வு பிப்ரவரி 23-ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்றும் JEE தேர்வு நடைபெற்று நான்கு நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |