நேற்று நடந்த போட்டியில் நடுவர் வைட் கொடுக்க முயன்ற போது தோனியின் பார்வையால் பின் வாங்கினார்.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. வாழ்வா ? சாவா என்ற நிலையில் போட்டியை சந்தித்த சென்னை பல்வேறு மாற்றங்களை செய்து வழியாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கூல் கேப்டன் தல தோனி மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டார்.
குறிப்பாக ரசிகர்களுக்கு பெற்றுத் தந்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் அவரின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் இருந்தன. 18.2 ஓவரை தாகூர் வீச ரஷித் கான் பேட் செய்து கொண்டிருந்தார். அப்போது நடுவர் வைட் கொடுக்க சென்றபோது… தல தோனி ஆக்ரோசமாக நடுவரை பார்த்தார். இதையடுத்து அவர் தனது எடுக்கும் முடிவை கைவிட்டு விட்டார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
https://twitter.com/ShahKaSamar/status/1316076839450734592