Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… பணவரவு யாருக்கு?… முழு ராசிபலன் இதோ..!!

மேஷ ராசி அன்பர்களே…!!  இன்று உறவினர் ஒருவர் எதிர்பார்ப்புடன் உங்களை அணுக கூடும். இயன்ற அளவில் உதவிகளையும் செய்வீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர மாற்று உபாயத்தை பயன்படுத்துவீர்கள். பணவரவை விட செலவு கொஞ்சம் இருக்கும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

இன்றைக்கு வீண்செலவு, காரியத்தடை கொஞ்சம் இருக்கும். எனினும் முயற்சியின் பேரிலேயே செல்வசெழிப்பு ஏற்படும். சில காரியங்களை சுலபமாக செய்வீர்கள். சில காரியங்கள் கொஞ்சம் கடினமாக இருக்கும். எதிலும் வேகம் காட்டுவீர்கள். உல்லாச பயணம் செல்ல நேரிடும். சொந்த பந்தங்களிடம் அளவுடன் பழகுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் காலதாமதம் இருக்கும்.

இருந்தாலும் மனம் மகிழ்வான சூழல் இன்று இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது,. நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

ரிஷப ராசி அன்பர்களே…!!  இன்று உங்கள் எண்ணம், செயலில் புதிய உத்வேகம் இருக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று சற்று எச்சரிக்கையுடன் எதையும் செய்வது நன்மையை கொடுக்கும்.

தொழில் வியாபாரத்தில் முழு கவனத்துடன் ஈடு படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அடுத்தவர்களுக்காக விட்டுக்கொடுத்து செல்வீர்கள். உத்யோகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மனதில் ஏதேனும் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்யுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

மிதுன ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் அனுபவ அறிவால் தகுந்த புகழை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பு வளம்பெறும். தாராள அளவில் உங்களுக்கு பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று சகோதர வழியில் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மற்றவர்கள் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் கொஞ்சம் ஏற்படலாம். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பது நல்லது. குறிப்பாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். கோபம் கொஞ்சம் அதிகரிக்கும்.

போதுமானவரை பொறுமையாகவே செயல்படுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

 

கடக ராசி அன்பர்களே…!! இன்று பிறரது சிறந்த சூழ்நிலையை உணர்ந்து பேசுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி கால அவகாசத்தில் நிறைவேறும். பணச்செலவு அதிகரிக்கும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதி பெற உதவும். இன்று எதிர் பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

கடன் கொடுப்பது மற்றும் பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாகவே இருங்கள். பணவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும். ஆனால் அதே நேரத்தில் ஓயாத வேலையினால் அலைச்சலும் இருக்கும். சிலருக்கு உத்தியோக மாற்றம், இடமாற்றம் ஏற்படக்கூடும். செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் அடர் நீல நிறம்

 

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று சிலரது அதிருப்திக்கு உட்பட நேரிடும். பேச்சை குறைத்து பணியில் ஆர்வம் கொள்வது சிறப்பு. தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். செலவுகளுக்கு சேமிப்பு பணம் பயன்படும். வெளியூர் பயணத்தில் மாறுதல்களை செய்வீர்கள். இன்று வாழ்க்கைத்துணை அனுகூலமாக இருப்பார்கள். மன கஷ்டமும் அவ்வப்போது வந்து செல்லும். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்.

சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது தீவிர ஆலோசித்து எதையும் செய்யுங்கள். இன்று விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழலல் இருக்கும். ஆனால் விளையாடும் போது மட்டும் ரொம்ப கவனமாக விளையாடுங்கள். இன்று கலை துறையை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று திருமண முயற்சியும் சிறப்பாகவே கைகூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிறம்

 

கன்னிராசி அன்பர்களே…!! இன்று உங்களின் இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டாகும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். உடல் உழைப்பு மட்டும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். புது தெம்பும் உற்சாகமும் பிறக்கும்.

புதிய பதவிகள் தேடிவரும். பணக்கஷ்டம் நீங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். எனினும் இன்று யோகமான பலன்களும் நடைபெறும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபார போட்டிகள் நீங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கையில் வந்து சேரும். இன்று தன வரவுக்கு எந்த குறையும் இல்லை.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகளை மனதில் நிறுத்தி செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும். பணவரவு முக்கிய செலவுகளுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். பெண்கள் பிறருக்காக பண பொறுப்பை மட்டும் ஏற்க வேண்டாம். இன்று வியாபாரம் தொடர்பான செலவுகள் இருக்கும்.

குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம். வாகனங்களால் செலவு ஏற்படும். நண்பரிடமிருந்து பிரிவு உடல் சோர்வு போன்றவை ஏற்படும். உத்தியோகம் நிமித்தமாக இடமாற்றங்கள் இருக்கும். அது மட்டுமில்லாமல் வெளியூர் பயணத்தின் போது மற்றவரிடம் பேச்சு கொடுக்காதீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரியபகவான் வழிபாட்டை வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

 

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் உதித்த திட்டம் செயல்வடிவம் பெறும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான பணிபுரிவீர்கள். கூடுதல் பண வருமானம் கிடைக்கும். உறவினர்களுடன் சந்தோசம் சந்திப்பு ஏற்படும். இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்.

உடன் பணிபுரிவோரால் அனுசரணைகள் உண்டாகும். உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடவும் கூடாது. இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக காணப்படும். வாகனத்தில் செல்லும்போது எப்பொழுதுமே பொறுமையாகவே செல்லுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

 

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அவப்பெயர் வராமல் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு அவசியம். முக்கியமான செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். இன்று தொழில் செய்பவர்கள் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு முன்னேற்ற பாதையில் அடி எடுக்க வைக்க கூடும். பண வரவு சிறப்பாக இருக்கும்.

அது மட்டுமில்லாமல் நண்பர்கள் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு உண்டான ஆர்வம் இருக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இன்றையநாள் ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது  நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

 

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் உதவியால் முக்கியமான விஷயத்தில் சுமுகமான தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற்று புதிய சாதனை உருவாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சிறப்பாகவே நடைபெறும். அதேபோல செல்வம் உரிமை அதிகாரம் போன்றவற்றில் இன்று கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்பிருக்கும், எச்சரிக்கையாக இருங்கள்.

தேவையில்லாத பொருட்களை தேர்வு செய்து வாங்க வேண்டாம். சகோதர சகோதரி வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். அது மட்டுமில்லாமல் தனவரவிற்கான சூழல் சிறப்பாக இருக்கும். சில முக்கியமான விஷயங்களை நீங்கள் மேற்கொள்ளும் போது  உங்களுடைய பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள்.

காரியங்கள் அனைத்துமே சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

 

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று மதிநுட்பத்துடன் செயல்படுகிவீர்கள். தொழில் வளர அனுகூல காரணி பலம்  பெரும். உபரி பண வருமானம் திருப்திகரமாக வந்து சேரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிறைந்திருக்கும். இன்று அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.பிள்ளைகளிடம் அன்பு பாசம் காட்டுவது ரொம்ப நல்லது.

கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு இன்று சீரான சூழ்நிலை இருக்கும். அதிக சிரமம் எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகமாகத்தான் இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது  அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்

 

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சிறிய வேலை ஒன்று அதிக சுமையாக மாறக்கூடும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பரின் ஆலோசனை உதவும். சுமாரான அளவில் பணம் கிடைக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் கூடுமானவரை இன்று சிறப்பாகத்தான் இருக்கும்.

அதேபோல தீவிரமுயற்சி உங்களுக்கு வெற்றியை கொடுப்பதாக அமையும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் சரியாகும், அதாவது பூர்த்தியாகும். எதிர்ப்புகளும் நீங்கும் தைரியம் கூடும். பணவரவு சிறப்பை கொடுக்கும். நட்பு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

இன்று கணவன்-மனைவிக்கிடையே பாசமும் அன்பும் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் செய்யும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |