Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை….. ”எந்த ராசிக்கு இன்று அதிஷ்டம்”..!!

மேஷம் ராசி அன்பர்களே…!!!  இன்று உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்லக் கூடும். புதிய திட்டங்களின் சிறப்பான வடிவமைப்பினால் தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். பணக் கடனில் ஒரு பகுதியை இன்று செலுத்த கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். இன்று கலைத்துறையினர் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுக்க கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.

எப்பொழுதுமே கவனமாக நடந்து கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழிலில் லாபம் கூடும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். கூடுமானவரை கொஞ்சம் வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டினை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

 

ரிஷப ராசி அன்பர்களே….!! இன்றைய நாள் திட்டமிட்ட பணி எளிதாக இன்று நிறைவேறும். இதனால் மனதில் புத்துணர்வும் நம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். பொருள் வரவு இன்று நல்லபடியாகவே இருக்கும்.நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களும் நன்றாகவே முடியும்.

அது மட்டுமில்லாமல் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மனமும் அமைதியாக காணப்படும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் மேலும் அமைதியாக இருக்கும். அதுபோலவே கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் இன்றைக்கு நீங்கள் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். முக்கியமாக பணம் பரிவர்த்தனையின் போதும் அதாவது, மற்றவர்களிடம் பணம் நீங்கள் வாங்குவதாக இருந்தாலும் சரி, கொடுப்பதாக இருந்தாலும் சரி கொஞ்சம் கவனமாகவே செயல்படுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே இன்று நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

 

மிதுன ராசி அன்பர்களே….!!! இன்று நண்பரின் அலட்சியமான பேச்சு வருத்தத்தை கொடுக்கலாம். பொறுமை குணம் பின்பற்றி அவர் சிந்தனையில் நல்ல மாற்றம் உருவாக்குவீர்கள். இன்று தொழில் வியாபாரம் நடைமுறை தாமத கதியில் தான் இயங்கும். பணச் செலவில் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் நல்ல முன்னேற்றம் பிறக்கும்.

சிலருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் ஏற்றுமதி தொழிலை செய்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை அன்பு இருக்கும். குடும்பத்தில் பிரச்சினை இல்லாமல் சிறப்பான சூழ்நிலை காணப்படும். இன்று புதிய நபர்களையும் நீங்கள் சந்திக்க கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

கடகம் ராசி அன்பர்களே…!!! இன்று பணி தாமதமாவதால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். நண்பரின் உதவி ஊக்கத்தைக் கொடுக்கும். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும்.  புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். ஒவ்வாத உணவுகளை உண்பதை தவிர்க்கவும். இன்று எடுத்த வேலைகளை மிகச் சரியாக செய்து, நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சி அடையும் விதமாக இருக்கும்.

உறவினர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்னோன்யம் இருக்கும். குடும்பத்தை பொறுத்த வரை மகிழ்ச்சியான சூழல் தான் இருக்கும். வேலை இல்லாத நண்பர்களுக்கு வேலை வாய்ப்புக்கான உத்திரவாத கடிதம் வருவதற்கான சூழல் இருக்கு. இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கும். இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

சிம்ம ராசி அன்பர்களே…!!  இன்று முக்கியஸ்தர் ஒருவர் உங்களின் நல்ல குணங்களை பாராட்டக் கூடும். தொழிலில் திட்டமிட்ட பணிகளை நீங்கள் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். அக்கறையுடனும் நடந்து கொள்வீர்கள். பண பரிவர்த்தனை நல்லபடியாகவே இருக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவீர்கள். அதனால்  எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கப் பெறுவார்கள்.

ஆனால் பொருள்களை மட்டும் கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. கூடுமானவரை வெளியூர் பயணம் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். இன்று கணவன் மனைவியை பொருத்தவரை நல்ல சிறப்பான முன்னேற்றம் இருக்கும். அன்பு இருக்கும். குடும்பத்தில் கூட மகிழ்ச்சி இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உறவினர் வகையில் உங்களுக்கு செலவுகள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாடு மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

கன்னி ராசி அன்பர்களே….!!  இன்று நீங்கள் உயர்வு தாழ்வு கருதாமல் எல்லாரிடமும் இனிய வார்த்தையைப் பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை பூர்த்தி செய்வீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும்.

எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகி செல்லும். பயணம் மூலமும் நல்ல லாபங்கள் கிடைக்கும். புதிய நபர்கள் வருகை இருக்கும். அவர்களின் நட்பு உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை சிறப்பான சூழல் இருக்கும். பிள்ளைகளிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை நிறம்

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். நீங்கள் செய்ய நினைத்த வேலையை சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். இன்று புத்திரர்கள் கேட்ட பொருளை உடனே வாங்கி கொடுத்து மகிழ செய்வீர்கள். இன்று அக்கம் பக்கத்தினர் இடம் அன்பு பாராட்டக் கூடும்.

இன்று அனைத்து விஷயங்களுமே உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களுடைய வாக்கு வன்மையால் சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் சிறப்பாக நடக்கும். பதவி உயர்வு, வரவேண்டிய சம்பளம் அனைத்துமே வந்து சேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே முடியும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

அதுபோலவே இன்று தேவையில்லாத பொருள்களை மட்டும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் மட்டும் நீங்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

விருச்சிக ராசி அன்பர்களே…!!! இன்று அவசியமற்ற வகையில் கிடைக்கின்ற உதவியை தவிர்ப்பது ரொம்ப நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். கூடுதல் உழைப்பு எப்பொழுதுமே தேவைப்படும். இன்று குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்ளுங்கள். இன்று உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வழக்குகளில் நிதானமான போக்கு இன்று இருக்கும். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மனம் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று ஆலயம் சென்று வாருங்கள். அனைத்து பிரச்சினைகளையும் நாம் தீர்த்துக்கொள்ளலாம். ஆலய வழிபாடு உங்கள் மனதை எப்பொழுதுமே நிதானமாக வைத்துக் கொள்ள உதவும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை ஒற்றுமை இருக்கும்.

ஆனால் செலவு மட்டும் அதிகமாகவே இருக்கும் அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஊதா நிறம்

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று கவனக்குறைவால் நன்மை பெறுவதில் தாமதம் இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் சீராக குறைகளை சரி செய்வீர்கள். பிறர் பார்வையில் தெரியும் படி அதிக பணத்தை மட்டும் செலவு செய்ய வேண்டாம். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இன்று வீண் மனக்கவலை இருக்கும்.

சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை தான் இருக்கும். இன்று கூடுமானவரை வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். நிதானத்தை கடைபிடியுங்கள். முடிந்தால் இன்று ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பாகவே இருக்கும். உங்களுடைய மனமும் அமைதியாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்து காரியமும் ஏ உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

மகர ராசி அன்பர்களே…!! இன்று பகைமை குணத்துடன் பேசுபவர்களிடம் விலகி இருப்பது எப்போதுமே நல்லது. நண்பரின் ஆலோசனை நன்மையை கொடுக்கும். தொழில் வளர்ச்சி கடின உழைப்பினால் சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு வாகனத்தில் இடம் தர வேண்டாம். இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதியதாக தொழில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற சூழல் கிடைக்கும்.

அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான நிலை காண்பீர்கள். இன்று அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு ஆர்வமிருக்கும். வேலை இல்லாத நண்பர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் கடிதமும் வரக்கூடும். இன்று பொறுப்புக்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். சரியான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

உடல்நலம் சீராக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெளிர் நீல நிறம்

கும்ப ராசி அன்பர்களே…!!  இன்று உத்வேக மணமுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பானதாக இருக்கும். கூடுதல் லாபம் கிடைக்கும். வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.இன்று மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறைந்து, மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்துச் செல்ல கூடும். இதனால் மனதில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். இன்று உறவினர் வகையில் உதவிகள் இருக்கும். வெளியூர் பயணங்களை கூட இன்று மேற்கொள்வீர்கள். அதன் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுபோலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும்  8

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

மீன ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் குடும்ப சிரமம் குறித்து பிறரிடம் பேச வேண்டாம். ரகசியங்களையும் அதுபோலவே யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தொழிலில் இலக்கை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். பண செலவு அதிகரிக்கும். உணவுப் பொருள்களை தரம் அறிந்து உண்பது நல்லது. இன்று உறவினரின் வருகை இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். வழக்குகளிள் நிதானமான போக்கு காணப்படும்.

எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மையும் உண்டாகும். இன்று மனக்குழப்பம் நீங்கி மனம் தெளிவு பெறும். அதுமட்டுமில்லாமல் செயல்களில் கூடுதல் நிதி உருவாகும். இன்று எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் சொல்லும். பண வரவு இருந்தாலும் செலவுகளும் கூடும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். அது போலவே எதிர்பாராத அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்ல படியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான   அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |