Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை….. ”எந்த ராசிக்கு இன்று அதிஷ்டம்”..!!

மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று எதிர்பார்த்த அனைத்து விஷயங்களுமே சிறப்பாக நடக்கும். அதாவது யோகமான நாளாக இன்று அமையும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். கடன் சுமை குறையும். அந்நிய தேசம் பயணம் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் வந்து சேரும்.

இன்று எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். முயற்சி வெற்றியை கொடுக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது மட்டும் நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி, செல்வ செழிப்பு ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

 

ரிஷப ராசி அன்பர்களே…!!! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். சொத்து பிரச்சனை சுமூகமாக முடியும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். இன்று கூட்டு வியாபாரம் திருப்தி தரும் வகையில் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது.

பணவரவை பொருத்தவரை திருப்திகரமாகவே இருக்கும். மேலிடத்தின் கனிவான பார்வை உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். சிறப்பான நாளாகவே இன்று இருக்கும். முடிந்தால் இன்று நீங்கள் ஆலயம் சென்று வாருங்கள் மேலும் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று உங்களுடைய வசீகரமான பேச்சு காதலில் வயப்படக்கூடிய சூழலை ஏற்படுத்தும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே இருக்கும். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

 

மிதுன ராசி அன்பர்களே…!!  இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாளாக இருக்கும். உங்களுடைய பொருளாதார நிலை இன்று உயரும். புகழ்மிக்க வர்களின் சந்திப்பு கிட்டும். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். இன்று வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்வுகளில் இருந்த தடை நீங்கும். உடலில் வசீகரத் தன்மை கூடும். அதுமட்டுமில்லாமல் கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொண்டு செய்யுங்கள். தனவரவு பொருத்தவரை இன்று சிறப்பாகவே இருக்கு.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

கடக ராசி அன்பர்களே…!!!  இன்று யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள் ஆகயிருக்கும். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த வேலை ஒன்று முடியாமல் இன்று போகலாம். குடும்ப பெரியவர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம். இன்று அடுத்தவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். அரசியல் துறையினருக்கு மேல் இடத்திற்கும், உங்களுக்கும் இடையில் இடைவெளி கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். உடல் நிலையை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வெளியூர் பயணம் செல்வதாக இருந்தால் உதாரணமாக, அதாவது சரியான பொருள்களை எடுத்துக் கொண்டு செல்வீர்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள். இன்று ஓரளவு சிறப்பு மிக்க நாளாகவே இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் மேலும் நல்ல பலன்களை நீங்கள் அடையக்கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடிய சூழல் இருக்கு. எதிர்பாராத வகையில் அவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

சிம்ம ராசி அன்பர்களே…!!!  இன்று கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாளாக இருக்கும். கடல்தாண்டி வரும் தகவல் மகிழ்ச்சியை கொடுப்பதாகவே அமையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராக இருக்கும். ஆனால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவுகள் இருக்கும்.

சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை மகிழ்ச்சியாகவே காணப்படும். தனவரவு ஓரளவுதான் கிடைக்கும். கொஞ்சம் கடினமான உழைக்கக் கூடிய சூழல் இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே சிறியதாக வாக்குவாதங்கள் வந்து செல்லும். கூடுமானவரை கொஞ்சம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. இன்று மாணவ கண்மணிகளுக்கு கடினமான முயற்சி தேவை.

கூடுமானவரை படித்த பாடத்தை எழுதி பார்ப்பது சிறப்பு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் கர்ம  தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் :  6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

கன்னி ராசி அன்பர்களே…!!  இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாக இருக்கும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் பகை ஏற்படாமல் அனுசரித்து செல்வது நல்லது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலை இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மையை கொடுக்கும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள் ஆனால் அவர்களுக்காக நீங்கள் செலவு செய்ய நேரிடும்.

இன்று மனம் ஓரளவு அமைதியாகவே இருக்கும். கூடுமானவரை நீங்கள் வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துவிடுங்கள் அது போதும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணம் செல்வதாக இருந்தால் பொருள்கள் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள். அதுபோலவே சரியான பொருள்களை எடுத்துக் கொண்டோமா என கவனித்து செல்லுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும், இருந்தாலும் எப்போதும் சொல்வது போலவே கடுமையாக உழைத்து பாடங்களை படிப்பது பெரிதல்ல, படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதி பார்ப்பதுதான் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்மங்கள் அனைத்தும் நீங்கி, செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!!  இன்று உங்களுக்கு புகழ் கூடும் நாளாக இருக்கும். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அதுமட்டுமில்லாமல் ஆதாயமும் உங்களை தேடி வரக்கூடும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அதுமட்டுமில்லாமல் இன்று மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாகவே செய்து வெற்றியும் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் மந்த நிலை கொஞ்சம் மாறும்.

வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது மட்டும் நன்மையை கொடுக்கும். அதுபோலவே வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கூட கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். பணப்பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். யாருக்குமே இன்றைக்கு நீங்கள் ஜாமீன் கையெழுத்து மட்டும் தயவு செய்து கொடுக்காதீர்கள். அதுபோலவேதான் வாக்குறுதிகளையும் கொடுக்காதீர்கள்.

இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழையுங்கள். படித்த பாடத்தை எழுதியும் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

விருச்சிக ராசி அன்பர்களே….!! இன்று சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும் நாளாகவே இருக்கும். சுற்றத்தார்களின் உதவிகள் கிட்டும். வரவு திருப்திகரமாக இருக்கும். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியம் இன்று துரிதமாக முடியும். திடீர் பயணம் திகைக்க வைக்கும். இன்று அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது நல்லது.

எந்த ஒரு காரியமும் மந்தமாக தான் இன்று இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கல்வியில் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசிப் பழகுவது நன்மையை கொடுக்கும். இன்று கணவன்-மனைவிக்கிடையே ஓரளவு அன்பு இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. வாக்குவாதங்கள் ஏதும் செய்ய வேண்டாம்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் சனீஸ்வர பகவானுக்காக எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று உங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். முக்கிய புள்ளிகளின் சந்திப்பும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டு காரியம் விரைவாக நடைபெறும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அதன்மூலம் அவர்களின் நல்ல மதிப்பையும் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும்.

பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அன்பு பெருகும் நாளாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று மிக முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டியது வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக ஈடுபட வேண்டும். மற்றவர்களுக்கு பஞ்சாயத்துக்கள் செய்வது வாக்குறுதிகள் கொடுப்பது போன்றவை இன்று நீங்கள் தவிர்க்க வேண்டும்.

இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடத்தை எழுதிப் பார்ப்பது சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும், முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும்

மகர ராசி அன்பர்களே…!!!  இன்று உங்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாள் ஆக இருக்கும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாக இருக்கும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். இன்று வழக்குகளை தள்ளிப் போடுவதும், சமாதான முறையில் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது.

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றியும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் எப்பொழுதும் போலவே மகிழ்ச்சி நிலவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல், இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி, செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

கும்ப ராசி அன்பர்களே…!!  இன்று அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். ரொம்ப நாளாகவே இருக்கும் பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று கலைத்துறையினருக்கு டென்சன் கொஞ்சம் ஏற்படும். உடன் இருப்பவரிடம் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது ரொம்ப நல்லதாக இருக்கும். அதுபோலவே இன்று யாரிடமும் எந்தவித வாக்குறுதிகளும் நீங்கள் கொடுக்க வேண்டாம்.

எதிலும் திருப்தி  இல்லாதது போல் தோன்றும். மனம் கொஞ்சம் அலைபாய கூடும். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள், கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று கணவன்-மனைவிக்கிடையே சின்ன சின்ன பூசல்கள் இருக்கும். அதை பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. பணவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும். மற்றபடி இன்று பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம்  உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் சனீஸ்வர பகவானுக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும்  7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

மீன ராசி அன்பர்களே…!!!  இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் இன்று விரிவடையும். இடமாற்றம் வீடுமாற்றம் செய்யலாம் என்ற சிந்தனை மேலோங்கும். இன்று எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அரசியல் துறையில் உள்ளவர்கள் இன்று கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வீண் செலவுகள், மற்றவர்களால் மனக்கஷ்டம் ஏற்படும். இன்று பொறுமையை கையாளுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

அது போலவே யாருக்கும் பணம் கைமாற்றாக வாங்கி கொடுக்காதீர்கள். அந்த பொறுப்பை மட்டும் தயவு செய்து ஏற்றுக் கொள்ளாதீர்கள். இன்று தெய்வீக நம்பிக்கை கொஞ்சம் கூடும். வெளிநபர்கள் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். இன்று தனவரவு கிடைப்பதில் மட்டும் கொஞ்சம் காலதாமதம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவக் கண்மணிகள் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கரும தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான   அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

 

Categories

Tech |