Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… இன்றைய ராசி பலன் அறிய..!!

மேஷராசி அன்பர்களே…!! இன்று வழக்குகளில் திசை ஏற்படும் நாளாக இருக்கும். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புக்கள் வழியே கேட்கலாம். வெளியுலகத் தொடர்பு  விரிவடையும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் நீங்கி விருத்தி அடையும். பொருட்கள் வெளியூருக்கு அனுப்பும் பொழுது மட்டும் கவனமாக அனுப்புங்கள்.

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பார்ப்பது நல்லது. உங்களுடைய பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். இன்று மனம் சந்தோஷமாக காணப்படும், ஆனால் கூடுமானவரை வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்லுங்கள். வாக்குறுதிகள் தயவுசெய்து யாருக்கும் கொடுக்க வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய பகவான் நமஸ்காரத்தையும் செய்து காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்

ரிஷப ராசி அன்பர்களே…!!! இன்று வெற்றிகள் வீடு தேடி வரும் சூழல் இருக்கு.  உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். உறவினர் பகை மாறும். இன்று கலைத்துறையினருக்கு கவனம் இருக்கட்டும். எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்யுங்கள்.எதிர்பாலினத்தவரிடம் பழகும் பொழுது எச்சரிக்கை அவசியம்.

கடன் கொடுப்பது பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமுடனிருப்பது நல்லது. இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். எந்த ஒரு பிரச்சினையையும் பெரிதுபடுத்தாமல் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் சேர்த்து மேற்கொள்வது மிகவும் சிறப்பு. உங்களுடைய வாழ்க்கையில் உள்ள சிரமங்கள் அனைத்தும் குறைந்து சந்தோஷம் நிலைத்து இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

மிதுன ராசி அன்பர்களே…!! இன்று முக்கிய புள்ளிகள் சந்திப்பால் முன்னேற்றம் கூடும். உங்களுடைய நிதி நிலை உயரும். விலை உயரும் பொருள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன்கருதி எடுத்த புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை ஏற்படும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாளாகவே இருக்கும். ஆனால் வாகனத்தில் செல்லும் பொழுது மட்டும் கொஞ்சம் பொறுமையாக செல்லுங்கள். இன்று மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழல் இருக்கு. கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்யுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

கடக ராசி அன்பர்களே…!!!  இன்று விரயங்களை சமாளிக்கக் கூடிய சூழல் இருக்கு. வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் நண்பர்களை சந்திக்க நேரிடும். வாகன பராமரிப்புச் செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். இழுபறியாக இருந்த காரியங்களும் சிறப்பாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். விரும்பிய பதவியும் கிடைக்கும். இன்று வழக்கு விவகாரங்களுக்குள் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை காணப்படும்.

கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். இன்று மாணவ கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூடுமானவரை கொஞ்சம் பொறுமையை கையாளுங்கள், அது போதும். விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகரிக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுபோலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

சிம்ம ராசி அன்பர்களே…!!! இன்று வரவு இருமடங்காகும். எதிர்கால நலன் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசனை செய்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். இன்று துணிச்சலாக முயற்சிகளை மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.

காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து, வெற்றி காண்பீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பாசம் அதிகரிக்கும். அதே போல அக்கம்பக்கத்தினர் இடமும் அன்பு பாராட்டக் கூடும். இன்றைய நாள் செல்வ செழிப்பு ஓரளவு ஏற்படுத்தக் கூடிய சூழல் அமையும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் இரு சேவை வழங்குவது சிறப்பு. காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று மனச்சுமை குறையும் நாளாக இருக்கும். மங்கள நிகழ்வு குடும்பத்தில் நடைபெறக் கூடிய வாய்ப்பு கைகூடும். வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். இன்று எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் உண்டாகும்.

பண வரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அக்கம்பக்கத்தினரும் இன்று அன்பு பாராட்டக் கூடும். இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உடல் ஓய்வாகவே இன்று காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான், வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். நீங்கள் செய்யக்கூடிய அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெளிர் நீல நிறம்

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடந்து முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணி மீண்டும் தொடரும். பக்கபலமாக இருக்கும் நண்பர்களால் சிக்கல்கள் தீரும். இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிகம் சிரமம் எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகமாகவே இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த புகழ், பாராட்டுக்கள் கூட கிடைக்காமல் போகலாம்.

கொஞ்சம் கடின உழைப்பு தேவைப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாதீர்கள். கூடுமானவரை அலட்சியம் வேண்டாம். வெளியூர் பயணம் செல்லும் பொழுது கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் மனம் நிம்மதியாக காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். உங்களுடைய காரியம் அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது .திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்க கூடிய சூழ்நிலை அமையும். இன்று சின்ன சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும் படி நடக்கும். அரசியல் துறையினருக்கு சிலர் நல்ல பலன்கள் ஏற்பட்டாலும் சிறு மன கஷ்டமும் அவ்வப்போது வந்து செல்லும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்யுங்கள்.

மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். யாரிடமும் இன்று பணக்கடன் மட்டும் வாங்க வேண்டாம். இன்று உடல் நிலையைப் பொறுத்த வரை எந்தவித பிரச்சினையும் இல்லை. மனம் அமைதியாக இருக்கும். ஓய்வும் உங்களுக்கு கிடைக்கும். அது போலவே இன்று வெளியூர் பயணம் செல்லும்போது உடமைகள் மீது ரொம்ப கவனமாக இருங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவ பெருமான் வழிபாட்டையும்  மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமும்  உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று விவாக பேச்சுக்கள் முடிவாக கூடிய சூழல் இருக்கும். விரோதிகள் விலகிச் செல்வார்கள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேற நண்பர்கள் கைகொடுத்து உவுவார்கள். இன்று அரசியலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதே போல கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையுமே தீவிர முயற்சி எடுத்து செய்வது மிகவும் நல்லது.

திடீரென்று கோபமும் டென்ஷனும் ஏற்படக்கூடும். எச்சரிக்கையாக இருங்கள். குடும்பத்தாருடன் பேசும்பொழுது ரொம்ப கவனமாக பேசுங்கள். சகோதரர்களுக்கு இடையே இன்று  மனக் கசப்புகள் வரக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் கணவன்-மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். எதையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். அவர்களும் உங்களை விட்டுச் செல்லக்கூடும். இன்று எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் பிறக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். உங்களுடைய பேச்சு திறமையால் காரிய வெற்றி ஏற்படும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மனநிறைவு ஏற்படும். இன்றைய நாள் அனைத்து விஷயத்திலும் வெற்றி வாய்ப்புகள் குவியும்,  கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். அன்னியோன்யம் அதிகரிக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு இந்த நிறம் சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும்  மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாக கூடிய சூழல் இருக்கும். வரவு  போதுமானதாகவே அமையும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். கண்டும் காணாமல் சென்ற உறவினர்கள் இன்று வலிய வந்து உறவாடுவார்கள். இன்று மற்றவர்களால் அமைதியின்மை ஏற்படலாம். அடுத்தவர் பேச்சைக் கேட்பதை குறைப்பது மட்டும் நல்லது.

குடும்பத்தில் இருப்பவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் ஏற்பட கூடும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து பேசுவது ரொம்ப நல்லது. அது மட்டுமில்லாமல் இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தூர தேசத்து நண்பர்களை சந்திக்கவும் கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நட்பால் நன்மை ஏற்படும் நாளாக இருக்கும். நாள்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவை கொடுக்கும். ஆதரவு உண்டாகும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவார்கள். இன்று எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினருடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படலாம். வாகனங்களால் செலவு ஏற்படும்.

நண்பரிடமிருந்து பிரிவு உடல் சோர்வு போன்றவை உண்டாக கூடும் பார்த்துகொள்ளுங்கள். எந்த விஷயத்திலும் நீங்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை வாகனத்தில் செல்லும் போது ரொம்ப கவனமாக செல்லுங்கள். அதேபோல நண்பர்களுக்காக நீங்கள் எந்தவித ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொள்ளாதீர்கள். இந்த விஷயத்திலும் ரொம்ப கவனமாக செயல்படுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |