Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… (07. 01. 20) முழு ராசி பலன் இதோ.!

மேஷ ராசி அன்பர்களே…!!  இன்று வழக்கத்திற்கு மாறான பணி ஒன்று உங்களுக்கு தொந்தரவை கொடுக்கலாம். தொழில் வியாபாரம் வளர கூடுதல் உழைப்பு அவசியம். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு பின்பற்றுவது அவசியம். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.

நண்பர்களிடம் மன ஸ்லோகங்கள் ஏற்படலாம். சுப செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புக்கு உண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இருந்தாலும் அவர்கள் இடம் தெரியாமல் போக கூடிய சூழலும் இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஆதரவு இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

 

ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் சுதந்திரமாக ஈடுபடுவீர்கள். புதியவர்களின் நட்பு மனதில் மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம்பெறும். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். இன்று புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். தீவிர முயற்சிகளால் அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும்.

இன்று கன்னிப் பெண்களுக்கு திருமணம் கை கூடும். ஆனால் வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். இன்று ஆலயம் சென்று வாருங்கள் சிறப்பாகவே இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருக்கெடுத்து ஓடும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆதாயம் சிறப்பாக இருக்கும்.

அது மட்டுமில்லாமல் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மேல் கல்விக்கான முயற்சியும் நல்ல பலனையே கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் இளம் மஞ்சள் நிறம்

 

மிதுன ராசி அன்பர்களே…!! இன்று அதிக பணி உருவாகி மனம் தளரும். செயல்களில் சீர்திருத்தம் அவசியம். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணச் செலவில் சிக்கனம் தேவை. ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். இன்று எண்ணியதை எப்படியாவது செயல்படுத்தி விடுவீர்கள். இன்று மன குழப்பம் மற்றும் அலைச்சல் இருக்கும்.

காரியத்தில் அனுகூலமும், பொருளாதார மேம்பாடும் ஏற்படும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்துகொண்டு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். தடைகளை முறியடித்து காரிய வெற்றியும் காணலாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.வெளிர் நீல நிறம் உங்களுக்கு சிறப்பாக அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

 

கடக ராசி அன்பர்களே..!!  இன்று உங்கள் பேச்சு மற்றும் செயலில் அறிவாற்றல் நிறைந்திருக்கும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் அபிவிருத்தி பெற சில மாற்றங்களைச் செய்வீர்கள். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று உறவினர்கள் நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனை பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும்.

சளி மற்றும் மார்பு தொல்லை கொஞ்சம் ஏற்படும். அதை மட்டும் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள் ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன் பணி செய்வோர் மேல் அதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு இன்று கிடைக்கும். இன்று எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் உங்களுக்கு நடந்தேறும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மேற்கல்வி கான முயற்சியில் வெற்றி இருக்கும். ஆசிரியர்களின் அன்பும் அரவணைப்பும் உங்களுக்கு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்

 

சிம்ம ராசி அன்பர்களே..!!!  இன்று உங்களின் வெகுநாள் லட்சிய கனவை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபார அணுகுமுறை சிறந்து நல்ல பலனைக் கொடுக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று படிப்பில் முன்னேற்ற சூழல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் சேர்வார்கள்.

கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் நடக்கும். நல்லது நடக்கும். அதே போல அதிர்ஷ்ட வாய்ப்புகள் இல்லம் தேடி வரக்கூடும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு திருமணம் சிறப்பாக நடந்தேறும். ஆகையால் உடலில் வசீகரத் தன்மை கூடும். காதல் வயப்பட கூடிய சூழல் இன்று இருக்கும் .

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்\ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்ககாரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்

 

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பொது விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் வேண்டும். புத்திரரின் நல்ல செயல் பெருமையை தேடிக் கொடுக்கும். இன்று முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சமூக சேவையில் உள்ளவர்களுக்கு லாபமாக இன்றைய நாள் இருக்கும். எனினும் கவனமுடன் சில விஷயங்களை மேற்கொள்வது நல்லது. நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது ரொம்ப கவனமாக இருங்கள். பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். செய் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும்.

இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று கூடுதல் வேலைப்பளு ஏற்படும். வீண் பேச்சு பேசுபவரிடம் விலகி இருங்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண வரவு சராசரி அளவில் இருக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவிகள் கிடைக்கும். இன்று வரவுக்கு எந்தவித குறையும் இருக்காது. எதிர்பாராத அதிர்ஷ்டமும் இருக்கும்.

உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இடமாற்றம் இருக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். இன்றைய நாள் ரொம்ப சிறப்பாகவே காணப்படும்.

இன்று உங்களுக்கான முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

 

விருச்சிகம் ராசி அன்பர்களே…!!  இன்று திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். உறவினர் நண்பர்கள் கூடுதல் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். தாராள பண வரவு இருக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று காரியத்தில் அனுகூலம் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணத்தேவை மட்டும் கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள்.

எல்லா பிரச்சினைகளும் சுமுகமாக இருக்கும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது மட்டும் நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எதையும் ஆராய்ந்து செய்வது ரொம்ப சிறப்பு. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மையே கொடுக்கும். மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள், உழைத்து படங்களை படியுங்கள் முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

 

தனுசு ராசி அன்பர்களே…!!  இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். இனிய வார்த்தையை பேசி நல்ல மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி திருப்திகரமாக இருக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு வந்து சேரும்.

பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டியிருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் பொழுது ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுப்பது நல்லது. இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

 

மகரம் ராசி அன்பர்களே…!!  இன்று பணிகளை நிறைவேற்ற கூடுதல் உழைப்பு அவசியமாகும். தொழிலில் உருவாகிற இடையூறு நண்பரின் உதவியால் சரிசெய்வீர்கள். அளவான பண வரவு கிடைக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு தொழில் கல்வி கற்பதில் ஆர்வம் ஏற்படும்.

திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்விர்கள். மனக்கவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்திற்காக இன்று நீங்கள் பொருட்களை வாங்கக்கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

 

கும்பம் ராசி அன்பர்களே…!!  இன்று சூழ்ச்சி மனதுடன் பேசுபவரிடம் விலகியிருப்பது நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு மனதில் புத்துணர்வைக் கொடுக்கும். இன்று அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். கொள்கை பிடிப்பில் தளர்ச்சி கொஞ்சம் ஏற்படலாம். தைரியம் பளிச்சிடும். எந்த வேலையிலும் உங்கள் தனித்திறமை வெளிப்படும். இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு கல்விக்காக மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் இளம் மஞ்சள் நிறம்

 

மீனம் ராசி அன்பர்களே…!!  இன்று இஷ்ட தெய்வ அணுகிரகம் பெறுவீர்கள். முக்கியமான விஷயத்தில் நல்ல பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாப விகிதம் அதிகரிக்கும். உறவினர்கள் உதவிகள் செய்வார்கள். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். காரியத்தில் சிறப்பான வெற்றி இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட இனங்களில் இருந்து வந்த சுணக்கநிலைகள் மாறும்.

முன்னேற்றம் நல்லபடியா இருக்கும்.  மருத்துவம் சார்ந்த செலவுகள் கொஞ்சம் இருக்கும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். உணவு கட்டுப்பாடு விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். வாழ்க்கை துணை வழியில் மிகுந்த அனுகூலம் ஏற்படும். இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு  மேற்கல்விக்கான நல்ல முயற்சியும் கல்வியில் ஆர்வம் ஏற்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |