Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… முழு ராசிபலன் இதோ.!!

மேஷ ராசி அன்பர்களே…!! இன்று அதிக வேலை பளு கொஞ்சம் உருவாகலாம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராகவே இருபயணத்தில் மார்க்கம்க்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.  இன்று குடும்பத்தில் இருந்து வந்த மன ஸ்லேகங்கள் மாறும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது.

அவர்களுடைய நலனில் கொஞ்சம் அக்கறையுடன் இருங்கள். உறவினர்கள் நண்பர்களின் ஆதரவுடன் காரியங்களை இன்று நீங்கள் சிறப்பாகவே செய்வீர்கள். வெளியூர் பயணத்தின் போது பொருள்கள் மீது ரொம்ப கவனமாக இருங்கள். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். உங்களுக்கு அமைதியாகவே இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கும்.கூடுமானவரை பேசும் பொழுது மட்டும் கொஞ்சம் வாக்குவாதம் இல்லாமல் பேசிக் கொள்வது ரொம்ப சிறப்பு.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் வாரம் வாரம் வருகின்ற வெள்ளிக்கிழமை என்பதால், இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பது உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்

 

ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். மற்றவர்களுக்கும் உதவிகளைச் செய்வீர்கள். வீண் பிரச்சினைகளில் மட்டும் தயவுசெய்து தலையிட வேண்டாம். கவனம் இருக்கட்டும் வாகனத்தில் செல்லும் பொழுது மிக பொறுமையாக செல்லுங்கள்.

மனத்துயர் நீங்கும். சிற்றின்ப செலவு இருக்கும். காரணமில்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும் இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களிலும் தெளிவாக நடந்துகொள்ளுங்கள். பணப்பற்றாக்குறை இன்று விலகிச் செல்லும். இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூல் செய்யும் பொழுது வாக்குவாதங்கள் இல்லாமல் வசூல் செய்யுங்கள். அது தான் புத்திசாலித்தனம். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லை.

நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை அனுபவிப்பார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

 

மிதுன ராசி அன்பர்களே..!!! இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசவேண்டாம். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கக்கூடும். இன்று துடிப்புடன் வேகமாக செயலாற்றுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது.

சொத்து சம்பந்தமான காரியதடை விலகிச்செல்லும். பயணங்கள் மூலம் நன்மை ஏற்படும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாகவே இருக்கும். அதே போல வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல வேலை கிடைக்கும். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். இன்று மாணவ கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

காரியத்தை இன்று சிறப்பாகவே செய்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

 

கடக ராசி அன்பர்களே…!! இன்று இஷ்ட தெய்வ அருளால் சில நன்மைகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும்.  கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை கொடுக்கும். வேடிக்கை வினோதங்கள் கண்டுகளிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். இன்றைய நாள் ஒரு சிறப்பான நாளாகவே இருக்கும். இருந்தாலும் ஆலயம் சென்று வாருங்கள் உங்களுக்கான அனைத்து விஷயங்களும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். அதேபோல் மேல் கல்விக்காக முயற்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அனைவரின் ஒத்துழைப்போடும் காதலர்கள் இன்று திருமணத்திற்கான பேச்சுவார்த்தையும் நடத்துவீர்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். செல்வச் செழிப்பு ஏற்படும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சாம்பல் நிறம்

 

சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று வாக்குறுதி நிறைவேற கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். தொழிலில் வளர்ச்சி பெற புதிய யுக்திகளை பின்பற்ற வேண்டும். மிதமான அளவில் பண வரவு கிடைக்கும். பணியாளர் கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்வார்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். லாபம் கூடும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலனைக் கொடுப்பார்கள். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பதற்கான சூழல் இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும். மாணவ செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தடைகளும் விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 76

அதிர்ஷ்ட நிறம் :மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று பழைய நினைவுகள் மனதில் உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அதிகமாக பணிபுரிவது அவசியம். பண வரவு எதிர் பார்த்ததை விட குறைவாகத்தான் இருக்கும் நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். இன்று நீங்கள் விலகி சென்றாலும் வலிய வந்து சிலர் பிரச்சனைகள் செய்யக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள்.

இன்று நீங்கள் எந்த ஒரு பணியையும் செய்யாமல் கொஞ்சம் அமைதியாக இருப்பது ரொம்ப சிறப்பு. ஏனென்றால் இன்று உங்களுக்கு சந்தராஷ்டம் தினம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையாகவே இருங்கள். பார்த்துக் கொள்ளலாம். அதே போல மாணவ செல்வங்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பதற்கு கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்களிடம் எந்தவித உதவியையும் எதிர்பாக்காதீர்கள் அப்படி எதிர்பார்த்தால் வில்லங்கத்தில் முடியும். எதிர்ப்புகள் ஓரளவு இருக்கும். இன்று மனக்குழப்பமும் இருக்கும். கடன் பிரச்சினை கூட கொஞ்சம் தலை தூக்கலாம்.

என்று நீங்கள் பொறுமையை மட்டும் கைவிடாதீர்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று உறவினர் அதிக அன்பு பாராட்ட கூடும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். அபரிமிதமான அளவில் பண வரவு கிடைக்கும். புத்திரன் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுக்கிறார்கள். இன்று வீண் அலைச்சலும் காரிய தாமதம் ஏற்படலாம். மற்றவர்கள் பொறுப்புகளை ஏர்ப்பதை தவிர்ப்பது சிறப்பு கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும்.

உங்களது கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக பேசுவது ரொம்ப நல்லது. வீண் அலைச்சல் தடை தாமதம் போன்றவை ஏற்படலாம். கவனம் இருக்கட்டும் புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது ரொம்ப சிறப்பாக. இன்று உங்கள் மனநிலை ஓரளவு அமைதியாக காணப்படும். மாணவகண்மணிகள் கொஞ்சம் பொறுமையாக இருந்து படங்களே படியுங்கள், படித்த பாடத்ததை எழுதிப் பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்

 

விருச்சிகம் ராசி அன்பர்களே…!!  இன்று எந்த செயலுமே நீங்க ரொம்ப நேர்த்தியுடன் செய்வீர்கள். நண்பர்கள் உங்களை மனதார பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். கலைத்துறைனருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியமுமே உங்களுக்கு இன்று நல்லபடியாக நடக்கும். ஆராய்ந்து செய்யும் காரியங்களில் சாதகமான பலனைக் கொடுக்கும்.

வாகனங்களை ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கை அவசியம். வீண் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். ஆகையால் நீங்கள் அதை பற்றி எல்லாம் கவலை பட வேண்டாம். உங்களுடைய நல்ல கடமையை நீங்கள் செய்து பாருங்கள் அதற்கான பலனை உங்களுக்கு கண்டிப்பாக இறைவன் கொடுப்பார். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெற கூடும். ஆசிரியர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். சக மாணவனிடமும் நீங்கள் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம  தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

 

தனுசு ராசி அன்பர்களே…!!  இன்று உங்களை சிலர் அவமதித்துப் பேசக்கூடும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாகவே உழைப்பீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று மற்றவர்களுக்கு உதவ போய் வீன் பலி ஏற்படக்கூடும் கவனமாக இருங்கள். தொழில் தொடர்பான அலைச்சல் இன்று அதிகரிக்கும். பண வரவு இன்று சிறப்பாக இருக்கும்.

மேலிடத்தின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது ரொம்ப நல்லது.  கூடுமானவரை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அக்கம் பக்கம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை ரொம்ப சிறப்பாகவே இன்று நடக்கும். அதேபோல காதலர்கள் எந்தவித வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் பொறுமையைக் கையாளுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று பாருங்கள். அது போதும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.  இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி சிறப்பான பலனை பெறமுடியும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை மற்றும் நீல நிறம்

 

மகரம் ராசி அன்பர்களே…!!  இன்று எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஆகலாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். உணவு பொருளை தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வி பற்றிய மனக்கவலை விலகி செல்லும். பெற்றோர் ஆசிரியரின் ஆலோசனை கைக்கொடுக்கும்.

துன்பங்கள் தீரும் மனக்கவலை அகலும் அடுத்தவரது கருத்தையும், ஆலோசனையும் கேட்காமல் உங்களது சொந்த புத்தியால் காரியங்களைச் செய்வீர்கள். பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும். ஆகாய மார்க்கமாக வெளியூர் பயணங்களில் செல்வதற்கான திட்டங்கள் உங்களுக்கு இருக்கும். அந்த திட்டம் நிறைவேறும். வெளியூரிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும். அதை நீங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை  கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் சின்னச் சின்ன மாற்றங்களை சந்திக்கக்கூடும். அதாவது உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வம் சேரும் செழிப்பாகவே காணப்படுவீர்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்

 

கும்பம் ராசி அன்பர்களே…!!  இன்று சாதனை நிகழ்த்த உரிய வாய்ப்பு உங்களை தேடி வரும். தொழில் வியாபார வளர்ச்சி பணி நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோக பொருள்களை வாங்கக்கூடும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் ஏற்படும். இன்று உயர் மட்டத்தில் உள்ள மனிதர்களிடம் தொடர்பு அதிகரிக்கும், சுபச் செலவுகளும் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீன் அலைச்சலும் காரிய தாமதமும் கொஞ்சம் இருக்கும்.

புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கைக்கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பு ஏற்க்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். மற்றவரிடம் பேசும் போதும் ரொம்ப கவனமாக பேசுங்கள். முக்கியமாக உயர் அதிகாரியிடம் பேசும் போது ரொம்ப பொறுமையாகவும் நிதானமாகவும் பேசுங்கள், மனக்குழப்பம் அடையாதீர்கள்.  இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் நிம்மதியாகவே காணப்படுவீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்ள்.  நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

 

மீனம் ராசி அன்பர்களே…!!  இன்று சமூகத்தில் கிடைக்கின்ற அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். குடும்ப பிரச்சனையை சுமுகமான தீர்வு பெறும். இசைப் பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்க வேண்டும். கூடுமானவரை கடன் கொடுத்தவரிடம் கோபமாக எதுவும் பேச வேண்டாம். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவு உங்களுக்கு கையில் மேல் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். எடுத்த காரியங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும், உள்ளமும் உற்சாகமாக இருக்கும். ஆனால் நீங்கள் சோர்வாக காணப்படுவீர்கள். அதேபோல் பழைய பாக்கிகளை வசூல் செய்வதாக இருந்தால் அவர்களிடம் நீங்கள் கோபப்படாமல் பேசுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்ததுதான் காணப்படும். இன்று மாணவக் கண்மணிகள் எந்தவித அவசரம் இல்லாமல் பாடங்களைப் படியுங்கள், நிதானமாக செயல்படுங்கள்.

கூடுமானவரை தியானம் போன்றவையும் பயிற்சியில் ஈடுபடுவது உங்கள் கல்விக்கு ரொம்ப உதவியாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |