மேஷ ராசி அன்பர்களே…!! இன்று தனவரவு தாராளமாக வந்து சேரும் நாளாக இருக்கும். இருப்பினும் செலவு கொஞ்சம் கூடும். தொலைபேசி வழித் தகவல் தொலை தூர பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும்.
பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் உங்களுடைய திறமை வெளிப்படும். இன்று பணவரவு கூடும். இன்று மாணவர்கள் கல்வியில் கடுமையாக உழைத்து பாடங்களை படிப்பார்கள். வெற்றியும் பெறுவார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாளாக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். வெளியூர் பயணம் என்றால் கையில் கையிருப்பு கரையும். இன்று அரசியல் துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடைகளையும் தாண்டி செயல்பட வேண்டியிருக்கும்.
எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். உங்களுடைய செயல் திறமை கூடும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். எல்லாம் முயற்சிகளுமே உங்களுக்கு இன்று வெற்றி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். உழைத்து பாடங்களைப் படியுங்கள்.
நிதானத்தை மேற்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் கருநீல நிறம்
மிதுன ராசி அன்பர்களே…!! இன்று சலுகைகள் கிடைத்து சந்தோசம் அடையும் நாளாக இருக்கும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று கொடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண வரவு வந்து சேரும். மனநிம்மதி கொஞ்சம் குறையலாம். வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. அதேவேளையில் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது ரொம்ப நல்லது. பொறுமையாக இருங்கள். காரியங்கள் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும். இன்று திருமண முயற்சிகளை மேற்கொள்வதாக இருந்தால் ரொம்ப சிறப்பாக இருக்கும். நல்ல அனுகூலமான பலன்களை அடைய கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
கடக ராசி அன்பர்களே…!! இன்று அதிகாலையிலேயே நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரக்கூடும். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும் சோர்வும் உண்டாகலாம், கவனமாக இருப்பது கொஞ்சம் நல்லது. அதேபோல கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருங்கள். அக்கம்பக்கத்தினர் இடம் எந்தவித சண்டையும் வேண்டாம். பொறுமையாக செல்லுங்கள். இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள். நல்ல முன்னேற்றத்தையும் பெறுவார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று நிதி நிலை உயர்ந்து நிலைமை சீராகும் நாளாக இருக்கும். இளைய சகோதரத்தின் வழியே எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மதிய நேரத்தில் மனதிற்கு இனிய சம்பவமொன்று நடைபெறலாம். வியாபார விருத்தி உண்டாகும். இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகத்தான் இருக்கும்.
மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது ரொம்ப நல்லது. இன்றைய நாள் ஓரளவு மன மகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும். ஆனால் யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொறுமையை கடைபிடியுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். ரொம்ப நன்றாகவே இருக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.
சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாளாக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வீட்டை பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். பெற்றோர் மீது பிரியம் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
காரியத்தில் ஓரளவு அனுகூலம் இருக்கும். மனம் கவலை தீரும். சமயோசிதம் போல் செயல்பட்டு காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆனால் வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்
துலாம் ராசி அன்பர்களே…!! பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஏக்கங்கள் தீர்ந்து இனிய பலன் கிடைக்கும். இடம் பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மனக்கவலை ஏற்படும்.
வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது மட்டும் நல்லது. உடல் சோர்வு கொஞ்சம் ஏற்படும். வீண் அலைச்சலை தவிர்த்து வேலையில கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபட வேண்டிய நாளாக இருக்கும். கனிவாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். எதிர்பார்த்தது எளிதில் நிறைவேறும். இன்று தொலைதூர தகவல்கள் மனம் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.
திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண் நோய் போன்றவை ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும் படியான சூழல் இருக்கும். தொழிலில் திடீர் போட்டிகள் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பது மட்டும் நல்லது. கூடுதலாக தான் இன்று உழைக்க வேண்டியிருக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள், பாடங்களை தெளிவாக படியுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் இருப்பீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று முன்கோபத்தால் முட்டுக்கட்டைகள் ஏற்படும் நாளாக இருக்கும். வியாபார விரோதங்கள் உருவாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். பயணங்களை மாற்றி அமைக்க வேண்டும். இன்று அலுவலகத்தில் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரிடலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத பிரச்சினை தலை தூக்கலாம்.
யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. பொறுமையாக இருங்கள். காரியங்களைச் சாதித்துக் கொள்ளுங்கள். அதேபோல முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், ரொம்ப நிம்மதியாக இருப்பீர்கள். எதிரிகளிடம் பேசும்பொழுது ரொம்ப கவனமாக பேசுங்கள். அதேபோல் பழைய பாக்கிகள் வசூல் செய்யும் போதும் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கடினப்பட்டுதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். கடினப்பட்டு படியுங்கள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று உதாசீனப்படுத்தியவர்கள் ஓடி வந்து சேரும் நாளாக இருக்கும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்ய முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைப்பது அறிது. இன்று தெளிவான சிந்தனையுடன் முயற்சிகள் சாதகமான பலன் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு மட்டும் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்றைய நாள் நீங்கள் மனம் மகிழ்ச்சியாகத்தான் இருப்பீர்கள். உடலில் வசீகர தன்மை கூடும். காதலில் வயப்பட கூடிய சூழழும் இன்று இருக்கும். இன்றைய நாள் நீங்கள் வெற்றி பெரும் நாளாக இருக்கும். இன்று மாணவக்கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் படிக்க வேண்டியிருக்கும். சிறப்பாக படியுங்கள். நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று பணப்பற்றாக்குறை அகலும் நாளாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். தொழிலில் எதிர்பாராத விதத்தில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்து கொள்வார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.
குறைகள் நீங்கும் சட்டதிட்டங்களுக்கும், நீதி, நேர்மை, நியாயத்திற்கும் கட்டுப்பட்டு இன்று நடப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்களும் ஏற்படும். மன நிம்மதியும் மனோதிடமும் ஏற்படும். இன்றைய நாள் உங்களுக்கு செல்வாக்கும் செல்வசெழிப்பு ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்
மீனம் ராசி அன்பர்களே…!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களால் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வங்கி சேமிப்பு உயரும். பொது வாழ்வில் புகழ் கூடும். விருந்தினர் வருகை உண்டாகும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும், போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.
இன்று உத்தியாகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டமான சூழலும் இன்று கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும். உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்படக்கூடிய சுழலும் இருக்கும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்களும் நடந்தேறும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெளிர் மஞ்சள் நிறம்