Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… முழு ராசிபலன் இதோ.!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல செயலை சிலர் குறை கூறி பேசுவார்கள். பெருந்தன்மையுடன் நீங்கள் விலகி செல்வீர்கள். தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும். பிறர் பார்வையில் தெரியும் படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். இன்று வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். பணி நிமித்தமாக பிரயாணம் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கணவன்  மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மனக்கசப்பு ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள், கவனமாக இருங்கள். இன்று வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரிசெய்தால் வளர்ச்சி சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளுங்கள். இன்று அரசியல் துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள்.

எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும்.மனக்கவலை நீங்கி நிம்மதி இருக்கும். பொருள் வரவும் இன்று அதிகரிக்கும். வாகனம் பூமி மூலம் லாபம் கிடைக்கும். இன்றையநாள் அளவற்ற மகிழ்ச்சியும் இருக்கும். செலவை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். பாடங்களை தெளிவாக படியுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள்.  சித்தர்கள் வழிபாடு எப்பொழுதுமே நன்மையயை  கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று சுதந்திரமாக நீங்கள் செயல்படுவீர்கள். புதிய சாதனையை நிகழ்த்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவு அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று மாணவர்கள் நல்ல பெயரும் பரிசும் பெறக்கூடும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பணவரவு எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற காரியங்கள் சிறப்பாக நடக்கும். வழக்குகளில் திடீர் குழப்பம் மட்டும் கொஞ்சம் ஏற்படலாம். அதுமட்டுமில்லாமல் தீ எந்திரம் ஆகியவற்றைக் கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுபோலவே இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! நீதி நேர்மைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அக்கம் -பக்கத்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும். பெரியோர்களிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. மனதில் மட்டும் திடீர் குழப்பம் ஏற்பட்டு சரியாகும். சமையல் செய்யும் பொழுதோ அல்லது மின் சாதனங்களைப் பயன்படுத்தும் பொழுதோ ரொம்ப கவனமாக இருங்கள். கூடுமானவரை கவனத்தை மட்டும் இன்று கடைபிடியுங்கள். இன்று மாணவ செல்வங்கள் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்ள எழுதிப்பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

 

சிம்மம் ராசி அன்பர்களே…!!  இன்று போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.  தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உடல் நலம் ஆரோக்கியத்தில் சிகிச்சை தேவைப்படும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

சரக்குகளை அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல் ஆற்றுவது ரொம்ப நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சண்டைகள் ஏற்படலாம்.  இன்று நாள் கொஞ்சம் கெடுபிடி யாகத்தான் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையைக் கையாண்டு சிறப்பான நாளாக இன்றைய  நாளை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள், மனம் நிம்மதியாக காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது  நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

 

கன்னி ராசி அன்பர்களே…!!  இன்று இடையூறு செய்பவரை அறிந்துகொள்வீர்கள். பணி குறித்த காலத்தில் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும்.  பணச் செலவில் சிக்கனத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். பணியாளர் பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்ற வேண்டும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.

எந்த ஒரு வேலையிலும் முழு கவனம் இருக்கட்டும்.  குழப்பத்தில் அதாவது குடும்பத்தில் அதிகமான குழப்பம் இருக்கும் போது எந்தவித முடிவையும் எடுக்க வேண்டாம், பொறுமையைக் கையாளுங்கள். நீண்ட நாட்களாக இருந்த வந்த தடைகள் இன்று விலகி செல்லும், எதிர்ப்புகள் விலகி செல்லும். அதே போல் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நில நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று செயல்களில் உத்வேகமும் சமயோசிதமும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பண வரவில் லாப விகிதம் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பெண்கள் நகை வாங்க அனுகூலம் ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க சிரமங்கள் கொஞ்சம் குறையும், வேலை வலு குறையும், உழைப்பு கொஞ்சம் வீணாகும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம் அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அதனால் திடீர் செலவுகள் ஏற்படும். இன்று மாணவக் கண்மணிகள் கடுமையாக உழையுங்கள். பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள். படித்த படத்தை எழுதிப் பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்

 

விருச்சிகம் ராசி அன்பர்களே…!!  இன்று உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறிப்போகலாம். தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். நேரம் தவறி உணவு உண்பதால் உடல் நலம் பாதிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். இன்று மேல் இடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.

எதிர்பார்த்த பணி இட மாற்றத்தை கொடுக்கலாம். குடும்பத்தில் அடுத்தவர்களால் பிரச்சனைகள் தீரும். உங்களது கருத்துக்கு மாற்றுக்கருத்து உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவது நன்மையை கொடுக்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

 

தனுசு ராசி அன்பர்களே…!!  இன்று நண்பரின் ஆலோசனையில் மதித்து நடப்பீர்கள். தகுதி திறமை வளர்ந்து புதிய நன்மைகளை பெற்றுக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி கூடும். இன்று மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். பணவரவு மன திருப்தியை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களின் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றமான சூழ்நிலை இன்று நீங்கள் சந்திக்க கூடும். இன்று மாணவச் செல்வங்களுக்கு நல்ல அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக்  கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்,  அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் அடர் நீல நிறம்

 

மகரம் ராசி அன்பர்களே…!!  இன்று வீணான பேச்சுக்களில் கவனம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலங்களை பாதுகாப்பது நல்லது. அதிகம் பயன் தராத பொருள்களை விலைக்கு வாங்குவதை தவிர்க்கவும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். இன்று அரசியல் துறையினர்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

வாகனங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களுடைய நிதி மேலாண்மை சீராகவே இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.  கணவன் மனைவிக்கு இடையே எந்த பிரச்சினை இல்லை நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

 

கும்பம் ராசி அன்பர்களே…!!  இன்று மனதில் அன்பும் கருணையும் நிறைந்திருக்கும்.  உறவினர் நண்பர்கள் பாசத்துடன் உங்களிடம் நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சி ரொம்ப சிறப்பாகவே இருக்கும். பண பரிவர்த்தனையும் நல்லபடியாகவே நடக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்ள கூடிய சூழலும் இருக்கும். இன்று மனம் உற்சாகமாக இருக்கும்.

மாணவர்கள் எதிர்பார்த்த மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள் கிட்டும். பண கஷ்டம் தீரும் இல்லத்தில் மகிழ்ச்சி இருக்கும். எதிலும் மிகவும் கவனமாக இருப்பது மட்டும் எப்பொழுதுமே கும்ப ராசிக்காரர்களுக்கு ரொம்ப நல்லது. எடுத்த காரியங்களை சிறப்பாக செய்வதற்கு கடினமாகவும் நீங்கள் உழைப்பீர்கள். சொத்து சம்பந்தமான காரியங்களில் தாமதம் கொஞ்சம் இருக்கும் இருக்கட்டும்,  பொறுமையை கடைபிடியுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீலத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக்  கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்

 

மீனம் ராசி அன்பர்களே…!!  இன்று வாழ்வில் சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்புக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் தேடி வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமான அளவில் வளர்ச்சி கொடுக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரரின் தேவையை நிறைவேற்றுங்கள். இன்று அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவது மட்டும் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்ய திட்டமிடுவது சிறப்பு. இன்று ஆதாயம் உங்களுக்கு நல்ல படியாகத்தான் வந்துசேரும்.  மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |