புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி சிறுமியை வன்கொடுமை செய்த 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு.
புதுச்சேரி மகாணம் நெய்வாச்சேரி கிராமம் தோட்டக்கார தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இந்த நிலையில் நந்தகுமாரும் பள்ளிச் சிறுமி ஒருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பேசி பழகி வந்துள்ளனர். இதற்கிடையில் நந்தகுமார் அச்சிறுமியை கடந்த 18 ஆம் தேதி யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அவர் மற்றும் அவரின் நண்பன் இணைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தன் பெற்றோரிடம் இந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதனைக் கேட்ட அச்சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த வழக்கை பதிவு செய்து போலீசார் வீட்டில் தலைமறைவாக இருந்த நந்தகுமார் மற்றும் அவருடைய நண்பன் ராம்குமார் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்து உள்ளது.