Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படியா பண்ணுறது… நண்பர்களின் கொடூர செயல்… வலை வீசி தேடும் போலீசார்…!!

கடன் தொகையை திரும்ப தராததால் ஆட்டோ டிரைவரை 3 பேர் இணைந்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோமதி நகரில் பிரசாந்த் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஜான் என்பவரிடம் இருந்து ஏழாயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். அதன்பின் 5 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்த பிரசாந்த் மீதமுள்ள 2 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுக்கவில்லை.

இந்நிலையில் திருவள்ளூர் நோக்கி ஆட்டோவில் பிரசாந்த் சென்று கொண்டிருக்கும்போது, ஆட்டோவை வழிமறித்த ஜான் அவருடைய நண்பர்கள் இணைந்து கொடுத்த பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பிரசாந்த் மணவாள நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய ஜான் மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |