சமீபத்தில் நடிகர் கரண் ஓபராய் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவரது நண்பர்கள் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதில் புகார் அளித்த அப்பெண்ணும் தங்கள் நண்பரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பிரிந்து விட்ட நிலையில் தற்போது பொய்ப்புகார் அளித்துள்ளதாகவும் கூறினர்.
மேலும் சமீப காலமாக பெண்கள் ஆண்களுக்கு எதிராக போலி பாலியல் குற்ற வழக்குகளை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினர். இதுபோன்ற போலி வழக்குகள் சிலவற்றிற்கு உயர் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளையும் சுட்டி காட்டினர். போலிக்குற்றச்சாட்டுகளை சுமத்தி, சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதற்காக மென் டூ இயக்கத்தை தொடங்கியுள்ளதாக நண்பர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.