மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மும்பையில் உள்ள மல்வானி என்ற பகுதியில் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள 16 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது நண்பரின் வீட்டில் பிறந்த நாள் விழாவில் அவருடைய நண்பர்களும் வந்திருந்தனர். இதையடுத்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய பிறகு அந்த இளைஞர்கள் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து தப்பி சென்ற சிறுமி பெற்றோருக்கு பயந்து இன்ஸ்டாகிராமில் அறிமுகமான நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்றபோது அந்த நபரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் அனைத்தையும் கூற அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பிறந்தநாள் விழாவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.