குளிர்சாதனப்பெட்டியில் உணவுகளை வைத்து உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
அனைவரது வீட்டிலும் குளிர்சாதன பெட்டி என்பது சாதாரணமாக இருக்கிறது. வெயில் காலங்களில் தண்ணீர் பாட்டிலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து ஜில்லென்று ஆனவுடன் குடிக்கும் வழக்கத்தை பெரும்பாலோனோர் கொண்டுள்ளனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். அதேபோல் எப்போதுமே குளிரூட்டப்பட்ட உணவுகள் உடலிற்கு கேடு தான்.
உணவுகளை தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்து, பின் மீண்டும் சூடுபடுத்துவது அதில் உள்ள சத்துக்களை செத்துப் போக வைக்கிறது. சமைத்த உணவுகளை உண்பதுதான் நல்லது. மேலும் பழங்கள், தேன், காய்கறி ஆகியவற்றை குளிர்சாதனப்பெட்டியில் வைக்காமல் இருந்தால் தான் அதில் உயிர் சத்துகள் நிறைந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காளான் உள்ளிட்ட சில பொருட்களை சமைத்து முடித்து விட்டு, மிச்சத்தை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பின் மீண்டும் சூடேற்றி சாப்பிட்டால் அது பயங்கரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் எனவும் ஆராய்ச்சி மூலம் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.