Categories
சினிமா தமிழ் சினிமா

சகோதரருடன் நடிக்கும் வரலட்சுமி… ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ராதிகா சரத்குமார்…!!

இயக்குனர் நிசாரின் கலர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ராதிகா சரத்குமார் வாழ்த்து தெரிவித்தார். 

பிரபலமான மலையாள இயக்குனரான இன்ஸ்டால் கலர்ஸ் என்ற படத்தை தற்போது தமிழில் இயக்கியுள்ளார். இப்படம் ஒரு நடிகரின் சப்ஜெக்ட் மேலும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து வரலட்சுமியின் பெரியப்பா சுதர்சனின் மகனான ராம்குமார் முக்கிய வேடமிட்டு நடித்துள்ளார். சரத்குமாரின் அண்ணனான சுதர்சன் சில ஆண்டுக்கு முன்னர்தான் காலமாகினார். எஸ்.பி.வெங்கடேஷ் இசையமைப்பில் சாஜன் ஒளிப்பதிவு செய்து அஜி இடிகுலா தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் ராம்குமாருக்கு சகோதரியாக வரலட்சுமியும், அவருக்கு ஜோடியாக இனியாவும் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். இயக்குனர் நிசார் 25க்கும் மேற்பட்ட படங்களை மலையாளத்தில் இயக்கியுள்ளார்.  அதனையடுத்து கலர்ஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டரை ராதிகா சரத்குமார் வெளியிட்டு ராம்குமார், வரலட்சுமி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Varalaxmi, Ramkumar, Ineya, Divya Pillai in Colors Movie First Look Posters

Categories

Tech |