கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், 9 ம் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக், 18வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார். சக்காரி தனது அதிரடி ஷாட்டுகளால் , ஸ்வியாடெக்கை திணறடித்தார். இறுதியாக சக்காரி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் , சக்காரி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.இந்த போட்டி 1 மணி நேரம் 35 நிமிடங்கள் வரை நடந்தது . இதன் மூலம் பிரெஞ்சு ஓபன் டென்னிசில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்ற , ஸ்வியாடெக் வீறுநடைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வெற்றிப்பெற்ற சக்காரி கூறும்போது,” வெற்றியை விவரிக்க வார்த்தைகளே இல்லை .இதன் மூலம் எனது கனவு நினைவாக உள்ளது என்று உணர்ச்சி வசத்துடன் கூறினார்.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் 33 ம் நிலை வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா,அமெரிக்க வீராங்கனை கோகோ காப்பை எதிர்கொண்டு, 7-6 (8-6), 6- நேர் செட் கணக்கில் கிரெஜ்சிகோவா வெற்றிபெற்று முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டியில் 13 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ,அர்ஜென்டினா வீரர் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொண்டு, 6-3, 4-6, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று ,14வது முறையாக அரை இறுதிக்குள் அடியெடுத்து வைக்கிறார். மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 6-3, 7-6 (7-3), 7-5 என்ற நேர் செட் கணக்கில் 2-ம் நிலை வீரரான ,ரஷியாவை சேர்ந்த டெனில் மெட்விடேவை தோற்கடித்தார் . அரைஇறுதி போட்டியில் சிட்சிபாஸ் , அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்திக்கிறார்.