Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ரபேல் நடால் 3 வது சுற்றுக்கு முன்னேறினார் …!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ,நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி காயம் காரணமாக விலகியுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில்  2வது சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரரான  ரபேல் நடால், பிரான்ஸ் வீரரான ரிச்சர்ட் கேஸ்கேட்டுடன்  மோதினார். இதில்  6-0, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று,  3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ,2 வது சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி, போலந்து வீராங்கனையான மேக்டா லினெட்டியை எதிர்கொண்டார் .முதல் சுற்றில் விளையாடும் போது ஏற்பட்ட காயத்தால், அவதிப்பட்டு வந்த ஆஷ்லி பார்ட்டி , 2 வது சுற்றிலும் அதே காயத்தால் தடுமாறினார் .இதனால் அவர் போட்டியிலிருந்து விலகினார் .

Categories

Tech |