Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ….கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ் விலகல் …!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற 30-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

பாரீஸில் நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி, வருகின்ற 30 ம் தேதி  தொடங்க  உள்ளது. இந்தப்போட்டியில் தரவரிசையில் 14 வது இடத்தில் உள்ள, கனடாவை சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவ் , போட்டியில் இருந்து விலகி உள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற ஜெனீவா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ,இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார் .இது பற்றி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ,’ மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்தேன்.

இந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து, விலகுவதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நேரத்தில் ஓய்வு தான் முக்கியம் என்று தெரிவித்ததால், இந்த முடிவை எடுத்துள்ளேன். அடுத்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியில் பார்க்கலாம்’ என்று அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக  சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா மற்றும் ருமேனியாவை சேர்ந்த  முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் காயம்  காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகினர்,என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |