பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி, வருகின்ற 30 ம் தேதி முதல் தொடங்கி ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் வீரர்கள் யார்- யாருடன் மோதுவது என்று குலுக்கள் (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. அதில் 13 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் மற்றும் முன்னாள் நம்பர் 1 வீரரான ரோஜர் பெடரர் ஆகியோர் ஒரே வரிசையில் இடம்பெற்றுள்ளன. இந்த வீரர்கள் அரையிறுதி சுற்றுக்குள் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெடரர் – ஜோகோவிச் இருவரும் காலிறுதி சுற்றில் சந்திக்க வேண்டி வரலாம்.
இதில் ரபெல் நடால் ,ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்சி பாப்ரினை முதல் சுற்றில் சந்திக்கிறார் . அதுபோல ஜோகோவிச் ,அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் சான்ட்கிரீனுடன் முதல் சுற்றில் மோதுகிறார். இதைத்தொடர்ந்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனான போலந்தை சேர்ந்த ஸ்வியாடெக் , சுலோவேனியாவை சேர்ந்த கஜா ஜூவானுடன் போட்டியை தொடங்குகிறார். இதுபோல் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, அமெரிக்காவை சேர்ந்த பெர்னர்டா பெராவுடன் முதல் சுற்றில் மோத உள்ளார் .