Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : காயத்தால் ரோஜர் பெடரர் விலகினார் …!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் கூறியுள்ளார் .

‘கிராண்ட் ஸ்லாம்’அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடக்கும்  ,பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில்  உலக தரவரிசையில் 8 ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக, அவரால்  தொடர்ச்சியாக போட்டியில் விளையாட முடியாத நிலையில் இருந்து வந்துள்ளார். மூட்டில் ஏற்பட்ட காயத்திற்காக , அவர்           2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இந்நிலையில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், 4 சுற்றுக்கு முன்னேறி இருந்த பெடரர்   போட்டியில் இருந்து விலகுவதாக கூறினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ” நான் 2 முறை மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் , கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், என்னுடைய உடல் நலம் குறித்து கவனிப்பது  எனக்கு முக்கியமாகும். காயம் குணம் அடைவதற்காக எனக்கு நானே  அவசரப்படுத்திக் கொள்ள மாட்டேன்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |