பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் , 8-ம் நிலை வீரரான கிரீஸ்நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டார் .
இதில் தொடக்கத்திலிருந்தே ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது . முதல் 2 செட்டை சிட்சிபாஸ் கைப்பற்றியதால், அவர் வெற்றி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதனை சுதாரித்துக்கொண்டு ஜோகோவிச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த 3 செட்டுகளையும் போராடி கைப்பற்றினார். இறுதியாக ஜோகோவிச் 6-7, 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.