Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : என்னை வீழ்த்த வேண்டுமெனில் …. வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் – டேனில் மெட்வடேவ்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் 3 வது சுற்று போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரரான டேனில் மெட்வடேவ்,  ரெய்லி ஓபல்காவை வீழ்த்தி  6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, ” களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் போட்டியை  நான் சிறப்பாக உணர்கிறேன்.

என்னுடைய ஆட்டத்திற்காக  நான் மகிழ்ச்சி அடைகிறேன் . என்னை வீழ்த்த நினைக்கும் வீரர்கள் சிறப்பாக  விளையாட வேண்டும் , என்று எனக்கு தெரிகிறது. போட்டியில்  மழை பெய்த சூழலில், ஈரமான களிமண் தரையை  நான் முற்றிலும் வெறுப்பேன் . ஆனால் இன்று எனக்கு அது உதவியாக  இருந்தது “, என்று அவர் கூறினார். இந்த  போட்டியில், இறுதிச்சுற்றில்  டேனில் மெட்வடேவ்  முன்னேறினால் ஏ.டி.பி. தரவரிசையில் நோவக் ஜோகோவிச்சை  பின்னுக்கு தள்ளி, முதல் இடத்திற்கு செல்லும் பொன்னான வாய்ப்பு மெட்வடேவுக்கு காணப்படுகிறது .

Categories

Tech |