பிரான்சில் ஆண்கள் தங்கள் துணைகளிடம் “ஐ லவ் யூ” என்று கூறமாட்டார்கள் என்ற ஆச்சர்ய தகவல் கிடைத்துள்ளது.
எளிதில் நம்ப முடியாத அளவிற்கு, பிரான்ஸ் மக்கள் ஒரு மூன்று வார்த்தையை அவ்வளவாக பயன்படுத்த மாட்டார்களாம். அந்த வார்த்தை, “ஐ லவ் யூ”. அதாவது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்கள் பிறநாடுகளில் வசிக்கும் ஆண்களைப் போல், தங்கள் காதலி அல்லது மனைவியிடம் அடிக்கடி “ஐ லவ் யூ” கூற மாட்டார்களாம்.
ஆனால் தங்கள் துணையின் மீது அதிக அன்புடன் இருப்பார்களாம். எனினும் எதற்காக அவர்கள் அந்த வார்த்தைகளை அவ்வளவாக பயன்படுத்துவதில்லை? என்றால் பிரெஞ்சு மொழியில் காதலுக்கு தனி வார்த்தை கிடையாதாம். லைக் மற்றும் லவ் என்ற இரு வார்த்தைகளுக்கும் “பிடிக்கும்” என்ற ஒரே அர்த்தம் தான்.
எனவே எனக்கு ஒரு விளையாட்டை பிடிக்கும், குழந்தையை பிடிக்கும், இந்த பெண்ணை பிடிக்கும் என்று எதைக் கூறினாலும் அர்த்தம் ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது. இதனாலேயே அந்த வார்த்தைகளை பயன்படுத்தி அன்பை வெளிப்படுத்தாமல், செயல்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.
தங்கள் துணையின் கைபை முதல் அனைத்தையும் தாங்களே சுமந்து கொண்டு செல்வது, சாக்லேட் மற்றும் பரிசுகளை வழங்கி அன்பை வாரி கொடுப்பது போன்றவற்றை செய்வார்கள். மேலும் கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவற்றாலும் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். பாரிசுக்கு சென்றால், சுற்றுலா பயணிகள் அனைவரும் கூடி நின்று பார்த்தாலும் எதையும் கவனத்தில் கொள்ளாமல் பிரெஞ்சு ஜோடிகள் முத்தமிடும் “French Kiss” உலக அளவில் பிரபலம் என்பதை அனைவரும் அறிவோம்.