மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர், கனடாவில் காலிஸ்தான் விவகாரம் குறித்து சுதந்திரம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, 13ஆம் வெளியுறவு அமைச்சர்களின் கட்டமைப்பு உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு, காலிஸ்தான் விவகாரம் குறித்து அவர் தெரிவித்ததாவது, கனடா நாட்டிலிருந்து இயங்கும் காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகள் குறித்து பிரச்சினைகளை இந்தியா எழுப்பிக் கொண்டிருக்கிறது.
ஜனநாயக சமூகத்தில் வழங்கப்படும் சுதந்திரங்கள் இவ்வாறான சக்திகளால் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இவை மதவெறிக்கும், வன்முறைக்கும் ஆதரவு தெரிவிக்கின்றன. உள்நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு இயங்க வேண்டும்? என்பது மட்டுமின்றி பிற நாடுகளிலும் ஜனநாயகம் எந்த வகையில் இயங்க வேண்டும்? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.