Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயம்புத்தூரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு இலவச பெட்ரோல்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஹெச்.பி. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மகளிருக்கு இலவசமாக பெட்ரோல் வழங்க முடிவெடுத்துள்ளது.

மார்ச் 8ம் தேதியன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள ஹெச்.பி பெட்ரோல் பங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் தினமான மார்ச் 8ம் தேதியன்று மட்டும் முதலில் வாகனம் ஓட்டி வரும் 100 பெண்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வீதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு காலை 11 மணி முதல் 12 மணி வரை பெட்ரோல் வழங்க உள்ளனர். மேலும் பெண்களின் சாலை பாதுகாப்பு கருதி அவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் உரிமையாளர், பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உலக மகளிர் தினத்தன்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வருங்காலங்களிலும் பெண்களை ஊக்குவிக்கும் பல செயல்களை செய்ய தங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த வருடம் இதேபோல சென்னை அண்ணாநகரில் உள்ள எச்.பி பெட்ரோல் நிலையத்தில், மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச பெட்ரோல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |