பல்கேரியாவைச் சேர்ந்த சுற்றுச்சுழல் கலைஞரின் 60 ஆண்டு கால கனவை அவரது மருமகன் நிறைவேற்றியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ‘ஆர்க் டே ரியோம்ப்’ என்னும் நினைவுச்சின்னம் உள்ளது. இதனை 2500 மீட்டர் வெள்ளி மற்றும் நீல நிற பிளாஸ்டிக் தாளினால் மூடப்பட்டுள்ளது. இந்த கலைப் படைப்பை பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரான் திறந்து வைத்துள்ளார். மேலும் அவர் இது பற்றி கூறியதில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களினால் நினைவுச்சின்னம் அதிக அளவில் சேதமடைந்ததுது.
மேலும் அதிலுள்ள பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டன. ஆனால் அதனை நல்லதொரு முறையில் மீண்டும் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து நினைவுச் சின்னத்தில் உள்ள கலைப்படைப்பை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
France's Arc de Triomphe has been wrapped in plastic – an installation dreamed up by the late artist Christo and brought to life by his nephew Vladimir Yavachev https://t.co/V6AImbrjfG pic.twitter.com/UEky6qoMzd
— Reuters (@Reuters) September 18, 2021
இந்த கலைப்படைப்பானது அடுத்த மாதம் மூன்றாம் தேதி பார்வையாளருக்காக இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக பல்கேரியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கலைஞரான மறைந்த Christo Vladimirov Javacheff என்பவர் 1961 ஆம் ஆண்டு இந்த நினைவுச்சின்னத்தை மூட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
