Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள்…. பணியிடை நீக்கம் செய்த அரசு…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்….!!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களை பிரான்ஸ் அரசு சம்பளம் இன்றி பணியிடை நீக்கம் செய்துள்ளது.

பிரான்சில் உள்ள தேசிய பொது சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” ” அரசு மருத்துவமனை ஊழியர்கள் 12% மற்றும் தனியார் பயிற்சி மருத்துவர்கள் 6% பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை” என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் சுகாதார மையங்களில் பணிபுரியும்  3,000 ஊழியர்களை  இடைநீக்கம் செய்ததாக பிரான்ஸின் சுகாதார அமைச்சரான ஒலிவியர் வேரன் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்சில் மருத்துவம், வீட்டு பராமரிப்பு, அவசர சேவை புரியும் தொழில் நிபுணர்கள் ஆகியோர் குறைந்தபட்சம் தங்களுக்கான முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்காக கடந்த புதன்கிழமை வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக அவகாசம் கொடுத்தும் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை சம்பளம் இல்லாமல் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மேலும் தற்போது பிரான்சில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் சுமார் 70% மக்கள் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். இது உலகின் மிக உயர்ந்த விகிதமாக கருதப்படுகிறது.

Categories

Tech |