பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தைகளில் போலியான யூரோக்கள் பயன்படுத்தப்படுவதாக காவல்துறையினர் எச்சரித்திருக்கிறார்கள்.
கொரோனா தொற்றிற்கு மத்தியில், உலக நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது. அதிலும், ஐரோப்பிய நாட்டு மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், அந்நாட்டின் காவல்துறையினர், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
அதில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சந்தைகளை குறிவைத்து போலியான யூரோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. 20, 50 மற்றும் 100 யூரோக்கள் போலியாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. கடந்த வாரத்தில் நீஸ் என்ற நகரத்தில் போலியான யூரோக்கள் கண்டறியப்பட்டது.
இது போன்ற போலியான தாள்கள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டால், மூன்று வருடங்கள் ஆயுள் தண்டனையும், 75 ஆயிரம் யூரோக்கள் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும் என்று காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். தற்போது வரை போலியான யூரோக்கள் பயன்படுத்தியதாக 10 நபர்கள் கைதாகியுள்ளனர். எனவே, மக்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டிருக்கிறது.