பிரான்ஸில் ஜூன் மாதத்திலிருந்து, பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி, இம்மானுவேல் மேக்ரோன், கட்டுப்பாடுகள் குறித்த திட்டத்தை அறிவித்துள்ளார். ஊரடங்கின் மூன்று மற்றும் நான்காம் கட்ட தளர்வுகள், இந்த மாதத்தில் கொண்டுவரப்படவுள்ளன. எனினும் கொரோனா தொற்றின் நிலையை பொறுத்து தான் கொண்டுவரப்படும்.
இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து, மூன்றாம் கட்ட தளர்வுகள் கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி ஹோட்டல்கள், காப்பி ஷாப் மற்றும் மதுபான விடுதிகள் போன்றவை திறக்கப்படவுள்ளது. கட்டிடங்களில், வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள். ஊரடங்கு இரவு 11 மணி ஆக மாற்றப்பட்டுள்ளது.
அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது. 30 ஆம் தேதியிலிருந்து நான்காம் கட்ட தளர்வுகள் கொண்டுவரப்படும். அதன்படி கட்டிடங்கள் மற்றும் வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சுமார் 1000 நபர்கள் வரை கலந்து கொள்ளலாம். மேலும் ஓட்டல்களுக்கு, எவ்வளவு நபர்கள் வேண்டுமானாலும் செல்லலாம். பொது முடக்கம் முடிவடைய போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.