Categories
உலக செய்திகள்

கழிவுநீரை கடலில் கொட்டும் பிரிட்டன்…. ஐரோப்பிய ஒன்றியத்திடம் புகார் அளித்த பிரான்ஸ்…!!!

பிரான்ஸ் அரசு, இரண்டு நாடுகளுக்குமான பகிர்ந்து கொள்ளப்பட்ட தண்ணீரில் கழிவு நீரை சேர்ப்பதாக பிரிட்டன் மீது புகார் தெரிவித்திருக்கிறது.

பிரிட்டன் பகிரப்பட்ட கடல் நீரில் கழிவு நீரை கொட்டுவது பிரெக்ஸிட்டிற்குப் பின் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிச்சலை தந்தது. இதனால் சுற்றுச்சூழலின் தரம் வெகுவாக குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அதன்படி நேற்று 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் ஆணையரான Virginijus Sinkevicius-க்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் பிரிட்டன் கடலில் கழிவு நீரை சேர்ப்பது உயிரினங்களுக்கு அதிக தீங்கை ஏற்படுத்தும். எனவே, அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

Categories

Tech |