Categories
உலக செய்திகள்

“இவர் பெண்ணே அல்ல, ஆண்!”….. வதந்தியால் கொந்தளித்த அதிபரின் மனைவி…..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் மனைவியான பிரிஜிட் மேக்ரான் இணையதளத்தில் உலவும் செய்தியால் கொந்தளித்துள்ளார்.

ஒரு பத்திரிகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில், பிரான்ஸ் அதிபரின் மனைவி பிரிஜிட் மேக்ரான் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் என்றும் அவரின் நிஜ பெயர் ஜீன் மைக்கேல் டிரோக்னியூக்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டது. மேலும், அந்த பத்திரிக்கையை எழுதிய பத்திரிக்கையாளர், தான் இது தொடர்பில் மூன்று வருடங்களாக பல்வேறு நிபுணர்களிடம் கருத்து கேட்டு, விசாரணை மேற்கொண்ட பின்பு தான் பத்திரிகையில் வெளியிட்டேன் என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து, கடந்த 10-ஆம் தேதியன்று யூடியூபில் அந்த வீடியோ பதிவிடப்பட்டது. எனினும் சுமார் 4 மணி நேரங்களில் அதனை நீக்கிவிட்டனர். அதற்குள், அதனை, 4 லட்சத்து 70 ஆயிரம் நபர்கள் பார்த்துவிட்டனர். மேலும், இந்த செய்தி ட்விட்டரில் அதி வேகமாக பரவியது.

இதனால் கடும் கோபமடைந்த பிரிஜிட் மேக்ரான், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன்பு, கடந்த 2017 ஆம் வருடத்தில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா தொடர்பிலும் இது போன்ற வதந்திகள் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |