பிரான்ஸ் அமைச்சர் இரண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் தனிமைப்படுத்துவது ரொம்ப ஓவர் என்று பிரிட்டனை குறை கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் செல்லும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி இருந்தாலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இது தொடர்பில் பிரான்ஸ் அமைச்சர் Clement Beaune என்பவர் கூறுகையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். “இது டூ மச்” என்று கூறியுள்ளார்.
மேலும் பிரிட்டன், பீட்டா வைரஸ் பிரான்சில் பரவியதால் தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கிறது. ஆனால் பிரான்சில் தற்போது பீட்டா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது என்று கூறியிருக்கிறார். பிரிட்டன் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அறிவியல் ஆதாரங்களை வைத்து மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.