பிரான்ஸ் அரசு ஓமிக்ரோன் தொற்று காரணமாக இங்கிலாந்திற்கு அத்தியாவசியமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு தடை அறிவித்திருக்கிறது.
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வருவதால் உலக நாடுகள் பல விதிமுறைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
எனவே, பிரான்ஸ் அரசு அத்தியாவசியமில்லாமல் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்கு தடை அறிவித்திருக்கிறது. மேலும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும், செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த கட்டுப்பாடு உண்டு என்று கூறப்பட்டிருக்கிறது.