Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தீராத தலைவலியும் தீர இதை செய்து பாருங்கள்….!!

தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் சில மருத்துவ குறிப்புகள் மூலம் தலைவலியில் இருந்து விடுபடமுடியும்

  • சூடான கொதிக்க வைத்த வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடிப்பதனால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • தலைவலி தொடங்கியவுடன் சூடாக பால் அருந்துவது தலைவலியை குறைக்கும். உணவில் நெய் சேர்த்து சாப்பிடுவதால் தலைவலி காணாமல் போகும்.
  • சித்த மருத்துவத்தில் தலைவலிக்கு சிறந்த மருந்தாக இருப்பது பட்டை. பட்டையை நன்றாக பசை போல அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி உடனடியாக தீரும்.
  • சந்தனக்கட்டையை தண்ணீர்விட்டு பசைபோல் அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி காணாமல் போகும்.
  • இஞ்சி, மல்லி, சீரகம் இவற்றை தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அருந்துவதால் தலைவலி பறந்து போகும்.
  • தேங்காய் எண்ணெய் வைத்து குறைந்தது 20 முதல் 25 நிமிடங்கள் நெற்றியில் மசாஜ் செய்ய தலைவலி பறந்துபோகும் உடலின் சூடும் குறையும்.

Categories

Tech |