கேரளாவில் வளர்த்து வந்த ஆட்டை விற்பனை செய்து முதல்வர் நிவாரண நிதிக்கு பெண்ணொருவர் பணம் வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக முதல்வர் பினராஜி விஜயன் அறிவித்த நிலையில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வறுமையான குடும்ப சூழலில் வாழ்ந்து வரும் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சுபைதா என்ற பெண், முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி உள்ளார்.
சுபைதாவின் கணவர் இதயநோயாளி. டீ கடை நடத்தி வாழ்க்கையை நகர்த்துபவர் சுபைதா. இந்நிலையில் தொலைக்காட்சி செய்திகளில் தினமும் நிவாரண நிதி தேவை என்ற செய்திகளை பார்த்து வந்த சுபைதா, தானும் உதவ வேண்டும் என நினைத்துள்ளார்.
இதனால் தான் பல நாட்களாக வளர்த்து வந்த ஆட்டை ரூபாய் 12 ஆயிரத்திற்கு விற்பனை செய்து அதிலிருந்து தனக்குத் தேவைப்படும் கடை வாடகை, மின்சாரக் பில்கள் போன்றவற்றை தவிர்த்து 5,510 ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் நிவாரண நிதியாக கொடுத்துள்ளார். தன் குடும்பமே கஷ்டப்படும் சூழலில் இருக்கும் பொழுது சுபைதா செய்த இந்த உதவியை கேரள முதல்வர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.