ஈராக் விமானப்படை தளம் மீது அமெரிக்க வீரர்களை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் 80 ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியானது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது , உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும். உள்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் ஈரான் பயங்கரவாதத்தை வளர்த்துவருகிறது. அணு ஆயுதத்திட்டங்களை ஈரான் கட்டாயமாக கைவிட வேண்டும். சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. ஆனால் ஈரானுக்கு எதிராக ராணுவத்தை, ஏவுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை.
மேலும், நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன். ஈரான் பயங்கரவாத நடவடிக்கையை கைவிடாமல் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவாது. ஈராக்கில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எந்த பாதிப்புமில்லை. அமெரிக்க படைத்தளத்தில் உள்ள வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். ராணுவ தளம் மட்டுமே சிறிது சேதமடைந்தது என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் ஈராக்கின் பாலத் அமெரிக்க விமானப் படைத்தளம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தபட்டதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் டுவிட் செய்துள்ளது. அமெரிக்க விமானப்படை தளம் மீது 4 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏ.எப்.பி. நிறுவனம் ட்விட் செய்துள்ளது. ஏவுகணை தாக்குதலில் 4 வீரர்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தாக்குதல் நடத்தியது யார் என்று அதிகார்வ பூர்வ தகவல் தெரியவில்லை.
#BREAKING Four rockets hit Iraq airbase hosting US troops: military sources pic.twitter.com/qPtoKImbdI
— AFP News Agency (@AFP) January 12, 2020