ஆஸ்திரேலியாவில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கும் மங்களூர் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது வானில் பறந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்தின் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு விமானங்களும் கீழே வயல்வெளியில் விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது.
இதில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் சுக்கு நொறுங்கி போன விமானத்தின் பாகங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விமான பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/InformativoNTI/status/1230149347347701768