Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய ஆப்ரேசன் மெலஹுரா: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப்படையினரும் இடையே நடைபெற்று மோதலில் இதுவரை 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ஷோபியன் மாவட்டத்தில் உள்ள மெலஹுரா கிராமத்தை சுற்றி நேற்று மாலை போலீசார், சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவத்தின் கூட்டுப் படையினர் முற்றுகையிட்டனர். ஆபரேசன் மெலஹுரா என்ற பெயரில் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு வீரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவத்தினரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யாட்டுள்ளன.

தற்போது மேலும் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் மடக்கி பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகளும் அல்கைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அன்சார் கஸ்வதுல் ஹிந்த் (ஏஜிஎச்) அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

Categories

Tech |