கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ரைச்சூர் (Raichur) சிந்தனூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை ஒரு கும்பல் வீடு புகுந்து இன்று மாலை சரமாரியாக கொடூரத்தனமாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூரத் தாக்குதலில் இறந்தவர்கள் சாவித்ரம்மா (வயது 55), ஸ்ரீதேவி (38), ஹனுமேஷ் (35) மற்றும் நாகராஜ் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது.. முதல் கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.