Categories
தேசிய செய்திகள்

புதைந்து போன மக்கள்…”தோண்டி எடுக்கும் ரேடார்”… தீரா வலியில் கேரளா….!!

கேரளாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை ரேடார் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. இந்த பெரு மழை வெள்ளத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் ஒரு வீடுகளையும் உடமைகளையும் இழந்து தவித்தனர்.

நிலச்சரிவு

சுமார் 3,500_க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் சேதம் ஏற்பட்டதோடு ,  300-க்கும் அதிகமான வீடுகள்  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையால் தற்போது வரை 116 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. பலரும் காணாமல் போயுள்ளனர். வயநாட்டு , புத்துமலா, மலப்புரம், கவலப்பாரா ஆகிய இரண்டு இடங்களில் மிக அதிக நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமானோர் உயிரிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்.

கேரளா நிலச்சரிவு: ரேடார் உதவியுடன் நிலச்சரிவில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்பு

மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் உடல்கள் எங்கு புதைந்திருக்கின்றன என்பதை கண்டறிவதில்  சிக்கல் எழுந்துள்ளது. ஆனாலும் தேடும் பணியில் பேரிடர் மீட்புப்படையினர்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் மண்ணுக்குள் சிக்கியவர்களை கண்டுபிடிக்க  ரேடார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐதராபாத்தை சேர்ந்த வல்லுநர்கள் ஜிபிஆர் உதவியிடன் மண்ணுக்குள் ஊடுருவி உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |