தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம், நாடோடிகள், குட்டி புலி, தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் சத்ய சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”நான் மிருகமாய் மாற”.
செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 8ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சசிகுமார், இந்த திரைப்படத்தில் ‘நடனம் இல்லை என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது’.
மேலும், பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக பணியாற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த படத்தில் எனக்கு ஒளிப்பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்ததாகவும் இந்த படத்திற்கு அனைவரும் கடினமாக உழைத்துள்ளோம் எனவும் கூறியுள்ளார். நீங்க பாத்துட்டு படம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க என தெரிவித்துள்ளார்.