Categories
மாநில செய்திகள்

எந்த தெய்வமும் சாதி பார்த்தது கிடையாது… அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – பொன் ராதாகிருஷ்ணன் பாராட்டு..!!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டம் பாராட்டப்பட வேண்டியது முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவர், எந்த தெய்வமும் எந்த சாதியும் பார்த்தது கிடையாது.. அடுத்த 100 நாட்களும் மிகச் சிறப்பாக செயல்படுவோம்.. இதில் விமர்சனத்திற்கு இடமில்லை.. தமிழகத்தில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது பாராட்டுக்குரியது.. தமிழ்நாட்டில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் நமது ஜீவன் தமிழ் வளர்ந்தால் தமிழன் வளர்வான் என்று கூறியுள்ளார்..

Categories

Tech |