தற்போது நடந்த 2109 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா. அதற்க்கு ஆதாரம் அவர் 17 பந்துகளில் 50 ரன்கள் எடுத்ததே சாட்சி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக், ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அசத்தி வருவதால் அவரின் திறமைக்கு இணையாக இந்திய அணியில் வேறு எந்த ஒரு வீரரும் கிடையாது என்று கூறினார். மேலும், சமீபகாலமாகவே ஹர்திக் பாண்டியா தவிர்க்க முடியாத வீரராக உருவாகியிருப்பதாகவும் சேவாக் புகழ்ந்து கூறியுள்ளார்.