Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக + காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்” கொதித்தெழுந்த முன்னாள் அமைச்சர் …!!

காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என்று திமுகவின்   KN நேரு ஆவேசமாக பேசியதில் கூட்டணியில் விரிசல் இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி கருணாநிதி காலத்தில் இருந்து தொடர்ந்து வருகின்றது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கூட காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முதலில் முன்மொழிந்தது திமுக தலைவர் முக.ஸ்டாலின். தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 10 மக்களவை இடங்களை ஒதுக்கியது. மக்களவை தேர்தலில் இந்த கூட்டணியே 39 இடங்களிலும்  வெற்றி பெற்றது.

stalin rahul க்கான பட முடிவு

காங்கிரஸ் சார்பில் தேனியில் போட்டியிட EVKS இளங்கோவன் மட்டுமே தோல்வியை தழுவியதால் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 9 காங்கிரஸ் உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்ப காரணமாக இருந்தது திமுக. இப்படி தொடர்ந்து அரசியலில் இணைந்து செயல்பாட்டுக்கு கொண்டிருந்த திமுக + காங்கிரஸ் கூட்டணியில் தற்போது முறிவு ஏற்பட்டுள்ளது.

kn நேரு க்கான பட முடிவு

திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற குடிநீர் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுகவின் முன்னாள் அமைச்சர் KN நேரு பேசும் போது , காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார். இது திமுக + காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதை உறுதி படுத்தியுள்ளது. சட்ட மன்றத்திலும் திமுக + காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து 109_ஆக பலம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |