தமிழக பாஜக துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.. அதேசமயம் தமிழகத்தில் எல் முருகன் தலைமையிலான பாஜகவும் ஆட்சியைக் கைப்பற்ற மும்முரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.. இந்த சூழலில் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து அக்கட்சியின் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்..
இந்த நிலையில்தான் தமிழக பாஜக துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது..
துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாமலைக்கு தமிழக பாஜக தலைவர் எல் முருகன் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.. பாஜகவில் ஏற்கனவே 10 துணைத்தலைவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.